Wednesday, August 12, 2009

பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி ?

சில அறிவுப்பூர்வமான வழிகள். (ஐடியா நம்பர் 4-ரொம்ப முக்கியமானது...!) ஆல் இன் ஆல் அழகு ராஜா ஐடியா நம்பர் 1. அலுவலகம் போறவங்க எல்லாருக்கும் இந்த முறைய கடைபிடிச்சா கண்டிப்பா பன்றி காய்ச்சல் வராது. இந்த மாதிரி வத்தல் போடுற சீட் மட்டும் இல்லாம, அழுக்கேருன ஜமுக்காலம், பிஞ்ச பாய் அப்படின்னு அவங்க அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி கெடக்கிற ஐய்டெத்த யூஸ் பண்ணிக்கலாம். அப்படியே கைக்கும், கால்ல மாட்டுற பழைய சாக்ஸ் இருந்த யூஸ் பண்ணிக்கலாம்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா ஐடியா நம்பர் 2. பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேலேறி நின்றால் வென்றிடலாம் பன்றி காய்ச்சலை.

இத சொன்னவர் படத்துல இருக்குற அந்த மகா சித்தரேதான்.இந்த மாதிரி தினமும் கால்ல ஒரு முறை சாயங்காலம் ஒரு முறை செஞ்சிங்கன்னா, பன்னி பறந்து போயிடும்....ச்சி பன்னி காய்ச்சல் பறந்து போயிடும்...!!!

ஆல் இன் ஆல் அழகு ராஜா ஐடியா நம்பர் 3.

இந்த மாதிரி கொடூரமான முகமூடி போட்டுக்கு சுத்துனாலும் பன்றி காய்ச்சல் உங்க கிட்டயே வராது !!! இத போட்டுகிட்ட உங்க பொண்டாட்டி புள்ளங்க கிட்ட வர்றதே சந்தேகம்தான்.(பலருக்கு காய்ச்சல் வர காரணமே பொண்டாட்டிங்க தான் - பண்ணிஎல்லாம சும்மா உடான்ஸ் )

ஆல் இன் ஆல் அழகு ராஜா ஐடியா நம்பர் 4.

இதுதான் ஐடியாவுக்கெல்லாம் தகப்பன் ஐடியா. பன்னிக்கு காய்ச்சல் வர்றதுனாலதான நமக்கெல்லாம் இந்த பன்றி காய்ச்சல் பரவுது, அந்த பண்ணிக்கே காய்ச்சல் வராம செஞ்சிட்டா ????இந்த முகமூடி , வத்தல் போடுற பிளாஸ்டிக் சீட் எல்லாம் தூக்கி போட்டுட்டு ஒடுங்க பக்கத்துல இருக்க மெடிக்கல் ஷாப்புக்கு..... ஒரு அட்ட மெட்டாசின் மாத்திர வாங்கிக்கங்க...அப்படியே உங்க தெருவுல சுத்துற ஒவ்வொரு பன்னியா புடுச்சு பன்னிக்கொரு மாத்திரை வாயில போட்டு விட்டீங்கன, அந்த பன்னிகளுக்கு இருக்குற காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும்....அப்புறம் நமக்கு பண்ணி காய்ச்சலே வராது....இது எப்படி இருக்கு ??

கூடுதல் குறிப்பு....

இத தயவு செஞ்சு செய்யப்புடாது !!!

- தொகுப்பு - ஆல் இன் ஆல் அழகு ராஜா - பன்னிக்குட்டி நல வாரியம்.

3 comments:

  1. யப்பா ஆல் இன் ஆல்.... இதுக்கு பன்னிக் காய்ச்சல்லே பரவாயில்ல! என்னா வில்லத்தனம்...????

    ReplyDelete
  2. நன்றி ஜெகநாதன்...!!!

    ReplyDelete
  3. machan. . super da. . going your work excellent day by day da. .keep it up. . tamil valga. .

    by
    yours faithfully
    Shiva

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...