Monday, August 24, 2009

ஜாலி ஹைக்கூக்கள் - பகுதி 2.

நான் எழுதிய சில ஜாலி ஹைக்கூக்கள்.....

எலிப்பொறியில் சிக்கியது
மூஞ்சுறு - இன்று
பிள்ளையார் சதுர்த்தி.
------------------------------------------------------------------------------------------------

நிலா காட்டி சோறூட்ட
பிள்ளையுடன் வாசலுக்கு வந்தாள்
அம்மா பாவம் இன்று அமாவாசை.
------------------------------------------------------------------------------------------------

சூரியனுக்கு வயதாகி விட்டதோ ?
பகல் வானில்
நிலா தெரிகிறது !!!
------------------------------------------------------------------------------------------------

நிறங்கள் எப்படி இருக்கும் ?
ஏதும் சொல்ல முடியவில்லை
என்னை கேட்ட பார்வையற்ற நண்பருக்கு!!!
------------------------------------------------------------------------------------------------

ராத்திரில வந்ததாம் சுதந்திரம்,
அடிச்சிக்கிட்டே சொன்னாரு -
வாத்தியாரு...
------------------------------------------------------------------------------------------------

இந்து கிருத்துவர் இஸ்லாமியர்
அனைவரும் ஒன்று கூடி அடித்தனர்
மதங்கள் இணையவேண்டும் என்றவனை.
------------------------------------------------------------------------------------------------
என்னின் சில கிறுக்கல்கள்.....

கோழி அடிச்சு கொழம்பு வச்சு
குண்டான் சோற ஒருக்கா முடிச்சு
காத்து வாங்க கொல்லைக்கு வந்தா
கோழிக்குஞ்சு மொறச்சு பாக்குது !!!
------------------------------------------------------------------------------------------------

நீ தொட்டு சென்ற இடத்தை
உன் வாசம் இன்னும் விட்டு செல்லவில்லை.
வண்டுகளும் வண்ணத்து பூச்சிகளும்
தேடுகின்றன ஏதோ பூ இருப்பதாய்....
------------------------------------------------------------------------------------------------

ஆடி மாச ராத்திரி வேள,
ஊரோர ஒத்தையடி பாதை
தொணக்கி நாதியில்லாம
நான் மட்டும் தனியா நடக்க,
புளியமரத்தோரம் ஒரு புதுப்பொடவ
என்ன பாத்து அழகா சிரிக்கா....

பார்த்த மாத்திரம்
ஈரக்கொல நடுங்க
உள்ளூர ரத்தம் ஓரஞ்சே போச்சு
ஆனது ஆச்சு மசுரா போச்சுனு,
கிட்ட போயி உத்து பார்த்தேன்.....
.
.
.
ஒக்காளி பிகரு சூப்பருல !!!
- இப்படிக்கு சிவன்.

ஜாலி ஹைக்கூக்கள் பகுதி 1 படிக்க இங்க கிளிக்குங்க

------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...