Monday, August 10, 2009
Free மச்சான் Free
இலவச எஸ்.எம்.எஸ்-களுக்கு (கூகிள் வலைத்தளத்திலிருந்து).
எனக்கு எவனுமே மெசேஜ் அனுப்ப மாட்டேங்கிறானு வருத்தப்படுற எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி. அந்த வருத்தப்படும் வாலிபர்களின் மனவருத்தத்த போக்க கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிற ஒரு அருமையான விஷயம்தான் இந்த இலவச எஸ்.
.எம்.எஸ்-கள்.
சூடான செய்திகளில் இருந்து குதூகலமான ஜோக் துணுக்குகள் வரை நீங்கள் இங்கே subscribe செய்து கொள்ளலாம். இந்த வலை தளத்தில நீங்க ஒன்னுக்கும் மேற்பட்ட பிரிவுகள்ளயும் பதிஞ்சு வச்சுகிடலாம். (உதாரணத்துக்கு விளையாட்டு, அரசியல் செய்திகள், கிரிக்கெட் ஸ்கோர், friendship மெசேஜ், காதல் மெசேஜ், ஜோக்ஸ், பங்குச்சந்தை நிலவரங்கள்,தினம் ஒரு வார்த்தை இப்படி பல நூறு விஷயம் அங்க உங்களுக்கு கிடைக்கும்).
என்ன அதிகபட்சமா ஒரு நபர் பதினைந்து தலைப்ப மட்டும்தான் பதிய முடியும்.
அங்க போனவுடனே உங்க கைப்பேசி நம்பர ரெஜிஸ்தெர் பண்ணனும், பண்ணி முடிஞ்சவுடனே உங்களுக்கு ஒரு "Verification Code”-அ அனுப்பி வைப்பாங்க. அந்த நம்பர் திரும்ப இங்க வலைத்தளத்தில கொடுத்தீங்கனா உங்க போன் நம்பர் கன்பார்ம் பண்ணிடுவாங்க.அதுக்கப்புறம் உங்களுக்கு தேவையான விஷயங்களுக்கு ரெஜிஸ்தெர் பண்ணிக்கலாம்.
இதை விட முக்கியமான வசதி, இதில் இருந்து நீங்க உங்க நண்பர்கள் எல்லாருக்கும் குரூப் மெசேஜ் கூட அனுப்பலாம். அதுக்கு முதல்ல நீங்க ஒரு சேனல்-அ(கிட்ட தட்ட ஒரு எஸ்.எம்.எஸ் குரூப் மாதிரி) புதுசா உருவாக்கி, அந்த குரூப்புக்கு உங்க நண்பர்கள் எல்லாரையும் சேர்க்கணும். அப்புறம் இந்த சேனல்-அ யூஸ் பண்ணி அவங்க எல்லாருக்கும் தகவல் பரிமாறி கொள்ளலாம்.
மேல் சொன்ன தகவல விவரமா தெரிஞ்சுக்க இங்க கிளிக்குங்க.
உடனே கூகிள்-ல உங்க நம்பர பதிவு செய்ய இங்க கிளிக்குங்க.
Subscribe to:
Post Comments (Atom)
ஆகா ஆகா - தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteசேந்துடுவோம்
நல்வாழ்த்துகள் சிவன்
நட்புடன் சீனா