Wednesday, August 19, 2009

ஜாலி ஹைக்கூக்கள்....!!!!

நான் எழுதிய சில ஜாலி ஹைக்கூக்கள்.....

இறந்த மஞ்சள் குருவியை
தோட்டத்தில் புதைத்தேன்
மறுநாள் ரோஜா செடியில் மஞ்சள் மொட்டு.
------------------------------------------------------------------------------------------------

இதயத்தில் ஒரு நொடி வேலை நிறுத்தம்.
பக்கத்தில் நின்ற அழகான பெண்ணின்
கழுத்தில் மறைவாய் ஒரு தாலி.
------------------------------------------------------------------------------------------------

இன்று பகலிலும்
ஒரு நிலா
மொட்டை மாடியில் அவள்.

------------------------------------------------------------------------------------------------

நாளை உனக்கு கல்யாணம்,
இன்று நம் காதல்
என் மனக்காட்டில் அடக்கம்.
------------------------------------------------------------------------------------------------

வெகு நாள் கழித்து
உன் வீடு வந்தேன்,
நீ இன்னும் இளமையாய் இருந்தாய்.
"அது என் தங்கை" என்றது
பின்னாலிருந்து ஒரு குரல்.
------------------------------------------------------------------------------------------------

தண்டவாளத்தின் கம்பியில்
ஒரு கருப்பு மரவட்டை
தூரத்தில் ரயில் சத்தம்.

------------------------------------------------------------------------------------------------

ஆப்பீசிலே தூக்கம்.
கனவில் , ராத்திரி பாத்த
இங்கிலீஷ் படம்.

- இப்படிக்கு சிவன்.
------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. அட்ராசக்கை ..அட்ராசக்கை ..அட்ராசக்கை ..!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...