Thursday, August 13, 2009

இனியா தேசத்து நினைவுகள் !

இனியா,
உன்
வீட்டுத்தெருவை
கடந்துச்செல்பவர்களுக்கு
கட்டணம்
வசூலிக்கப் படுகிறது ...
நீ குடியிருப்பதால்
உன் வீட்டை
சுற்றுலாஸ்தலமாக
அறிவித்து விட்டதாம்
அரசாங்கம்!
"செய்யும் தொழிலே
தெய்வம்! "
என் தொழில்
காதல்!!
அப்படியானால்
நீ தானே
என் தேவதை!!!
எல்லோருக்கும்
சொந்த வீடு ,
சொந்த ஊர்
தான் இருக்கும்.
உன் தயவால்
எனக்கென்று
சொந்த உலகமே
இருக்கிறது!!
என்
உடலுறுப்புகள் யாவும்
வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளன...
உன் இதயமும்
என் இதயமும்
நடத்திய பேச்சுவார்த்தை
தோல்வியில்
முடிந்து விட்டதாம்..
- மழைக்காதலன். (இனியாவின் புகுந்த வீடு)

1 comment:

  1. மச்சான் un hikoo super. epadi machan unala mattum epadi mudithu..

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...