Friday, August 21, 2009

கூகிள் பார்வையில இந்தியாவும் , அமெரிக்காவும் ..

அல்லாருக்கும் ஒரே குஜாலான சேதி !!
உலக மக்கள் எல்லாம் நம்ப நாட்டை பத்தியும் , பெரியண்ணன் அமெரிக்கா பத்தியும், என்னா பீல் பண்ணுராய் ங்கன்னு தெரிஞ்சிக்க கூகிள் ஐடியா கொடுத்திருக்கு ..
1) www.google.com போங்க ..(கூகிள் suggest , இருக்கானு பார்த்துக்குங்க.. இல்லைனா கீழ படம் பாருங்க! )
2) கூகிள் தேடுதல் பெட்டி ல “why are indians ..அப்பிடி னு டைப் அடிங்க .. ஏன் இந்தியர்கள் மிக அறிவாய் இருக்காங்க ? அழகாய் இருக்காங்க? பணக்காரர்களாய் உள்ளார்கள் ? இது போன்ற தேடல்கள் தான் மிக அதிகம் !
இந்தியா என்னைக்குமே இந்தியா தான் .. வசூல் ராஜா படத்துல கமல் சொல்றா மாதிரி , "நம்மளையே வெட்க பட வைக்கிறானுங்க!!"
3) அதே பொட்டி ல “why are americans” ..அப்பிடி னு டைப் அடிங்க ..
ஏன் அமெரிக்கர்கள் குண்டா இருக்காங்க ? ஏன் மட்டி பய புள்ளைகளா இருக்கானுங்க ? ஏன் சமூகத்துக்கு பய ப்படறானுங்க? இது போன்ற தேடல்கள் தான் குவிஞ்சிருக்கு ..
ஐயோ ஐயோ ..இத தான் சொந்த செலவுல சூனியம் னு சொல்லு வாய்ங்க எங்கூர்ல ..(கூகிள் - அமெரிக்கா கம்பெனி )
4) அடுத்து "இனவெறி புகழ்" ஆஸ்திரேலியா, அடிச்சி பாருங்க னு ,நான் சொல்ல மாட்டேன் பா..எதுக்கு வம்பு , உங்க இஷ்டம்.
அப்பால , துபாய், பஹ்ரைன் ,அபிதாபி , ஷார்ஜா எல்லாத்துக்கும் இதே டெக்னிக்கு பிக்கப் பண்ணிக்கலாம் !!
பி.கு : ஏன் இந்தியர்கள் இனவெறி உடையவர்களாய் இருக்காங்க னு கொஞ்சம் பேர் பார்த்து இருக்காங்க ...உறுத்தலாய் இருக்கு , உள்ளுக்குள்ள ...இப்போ தான் 62 ஆவது சுதந்திர தினம் போச்சு !!

4 comments:

  1. அருண், அப்படியே கூகுள்ல "Why OBAMA is"-னும் அடிச்சி பாருங்க...இன்னும் நிறைய கண்டுபிடிக்கலாம் போல இருக்கே...

    ReplyDelete
  2. பலே பலே ..கலக்கல்ஸ் !

    ReplyDelete
  3. hey... very interesting.. thanks for the info.. and had fun too


    he he appdiayae google la en pera 'srinivasan alavandar' adichu paartha egaptta results..

    ReplyDelete
  4. சீனு சார், வந்ததுக்கு நன்றி ! உங்க பேர் அடிச்சா google திணறுது ..கலக்குங்க முனைவர் !!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...