Monday, August 31, 2009

ஊமைத்தொலைபேசி..!

மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்,
ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
", மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..
நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் , தலைக்குப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும் புன்னகையும் , சந்தோஷமும் நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.
உடனே " லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..
"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .
ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தபடியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..
- அருண். இரா

Friday, August 28, 2009

டூயல் (DUEL) -1971 ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

டூயல் (DUEL), இதுதான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கோட முதல் திரைப்படம்(1971). ஒரு பிளைமௌத் கார், ஒரு டேங்கர் லாரி, நம்ம ஹீரோ அப்புறம் ஒரு முகம் தெரியாத வில்லன்.இவ்வளுவதாங்க படத்துல வர்ற முக்கிய பாத்திரங்கள் இந்த ஒன்றரை மணி நேர திரைப்படம் முழுதும் இந்த நாலு கதாப்பாத்திரங்களுக்கு நடுவுல நடந்து முடிஞ்சிடுது.

சில வருஷங்களுக்கு முன்னாடி சன் டிவி-ல வந்த மர்ம தேசம் நாடகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த நாடகத்துல இப்படிதான் ஒரு டேங்கர் லாரி எல்லா கதாப்பாத்திரத்தையும் திடீர்னு வந்து கொன்னுட்டு மறைஞ்சு போயிடும்.

இந்த படத்த அந்த லாரி கான்செப்டோட முன்னோடின்னே சொல்லலாம்.என்ன வித்தியாசம் இதுல லாரி கடைசிவரை ஒரே ஆள கொள்ள போராடுது.

இதுதான் கதைக்களம்.

ஒரு சந்திப்புக்காக ஹீரோ தன்னோட பிளைமௌத் கார்ல வெளியூர்க்கு கிளம்புகிறார். டப்பிங் பட ஸ்டைல்ல சொல்லனும்னா, 1971ம் வருடம், காளிபோர்னியா மாகானத்துல டேவிட் பயணம் செஞ்சிட்டு இருக்கும் போது ,அவருக்கு முன்னாடி புகைய கக்கிக்கிட்டு ரொம்ப மெதுவா போற ஒரு டேங்கர் லாரிய சைடு வாங்கிட்டு முன்னாடி போயிடுறார். கொஞ்சம் நேர கழிச்சு அதே டேங்கர் லாரி இவரு கார ஓரம் கட்டிட்டு அது முன்னாடி எஸ் ஆகுது.

முன்னாடி ஜகா வாங்குன லாரிக்காரன் வேகமா போகாம திரும்ப மெதுவாவே போறான். அதனால பேஜார் ஆகுற ஹீரோ வேற வழி இல்லாம திரும்ப சைடு வாங்கிட்டு முன்னாடி வர்றார்.

இந்த எடத்துலதான் படம் வேகம் புடிக்குது.மாத்தி மாத்தி லாரியும் காரும் கொஞ்ச நேரம் இந்த மாதிரி விளையாடுறாங்க.ஒரு சந்தர்ப்பத்துல முன்னாடி போற லாரி வேணும்னே மெதுவா போறது மட்டும் இல்லாம ஹீரோவுக்கு சைடும் குடுக்காம அவருக்கு தண்ணி காட்டுது. சில நிமிஷத்துல வெறுப்பின் உச்சத்துக்கு போற ஹீரோ, ரோட்ட விட்டு இறங்கி ஓவர் டேக் பண்ணி அளவுக்கு மீறிய ஸ்பீட்ல போய் ஆபத்துல மாட்டிகுறார். இதுதான் படத்தோட முதல் சில காட்சிகள். விபத்துல சிக்குற ஹீரோ-வ லாரி விடுதா, தொடருதாங்குறது மீதி படம்.

இந்த படத்தோட முக்கியமான ஹைலைட் என்னன்னா, கடைசி காட்சி வரைக்கும் லாரி டிரைவரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. (நம்ம அஞ்சாதே படத்துல வர்ற மொட்ட கேரக்டர் மாதிரி). காமிராவ படத்துல பயங்கரமா யூஸ் பண்ணி இருக்காங்க, பல சீன்-ல காமிரா கோணம் நம்ம பிரம்மிக்க வைக்குது.

கதைக்களம் கடைசி வரைக்கும் ஒன்னு தான் அப்படினாலும் ஸ்பீல்பெர்க் அவரோட இயக்கம் படத்த ரசிக்க வைக்குது.அந்த லாரி-ய எங்க புடிச்சாங்கன்னு தெரியல, நிஜமாகவே அது சீன்-ல வருவதே மிரட்டலாக உள்ளது.படத்துல முகம் தெரியும் ஒரே ஒரு பாத்திரம், ரெண்டே மணி நேரத்துல நடந்து முடியுற திரைக்கதை, இது எல்லாத்துக்கும் மேல இயக்குனர் ஸ்பீல்பெர்க் இவைதான் இந்த படத்த பார்க்க தூண்டும் விஷயங்கள்.

இந்த படத்த நீங்க U-Torrent ல பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்க கிளிக்குங்க

பாத்துட்டு உங்க கருத்துகளையும் போட்டுட்டு போங்க மச்சான்ஸ்...

படத்தின் டிரைலர் இதோ.....

Wednesday, August 26, 2009

ரஜினியுடன் சண்டை போட்ட அமிதாப் பச்சன்.




இது சூப்பர் ஸ்டாரின் கோடான கோடி ரசிகர்களுக்கு.....

ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அமிதாப் பச்சனுக்கும் சின்ன வாக்குவாதம், யாருக்கு செல்வாக்கு அதிகம்னு.
தலைவர் சொன்னாரு, " அமிதாப் நீ யார வேணும்னாலு சொல்லுஅவங்களுக்கு என்னைக்  கண்டிப்பா தெரிஞ்சிருக்கும், ". 
"சும்மா உதார் வுடாதீங்க ரஜினி அது எப்படி  உங்களை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் ?"
"
நீங்க சொல்லுங்க அமிதாப்..."
"
சரி ரஜினி, உங்க வழிக்கே வர்றேன்....உங்களுக்கு "TOM CRUISE" தெரியுமா ?"
"
நல்லா தெரியுமே அவரும் நானும் ஓல்ட் friends-மா...."

உடனே ரஜினி அமிதாப்பை டாம் வீட்டுக்கே கூட்டிட்டு போறார்
ரஜினி வர்றதா பாக்குற டாம், டக்குனு சந்தோசமா "தலைவா வாங்க, இன்னக்கி நீங்க என்கூடதான் சாப்பிடனும், கூட friends வேற வந்திருக்காங்க" னு சொல்றார்.

எல்லாம் முடிஞ்சு திரும்பும்போது,
இத பாத்தும் திருப்தி அடையாத அமிதாப், "இது ஒருவேளை லக்- இருக்கலாம்
ரஜினி " அப்ப இன்னொருத்தர் பேரு சொல்லுங்க".
"
சரி இந்த முறை பார்ப்போம், எங்க உங்களுக்கு ஒபாமா தெரியுமா?"
ஒரு நிமிஷம் யோசிச்ச ரஜினி உடனே நல்லா தெரியுமே-னு சொல்றார்.
ரெண்டு பேரும் இப்ப கிளம்பி வெள்ளை மாளிகைக்கு போறாங்க.
அவசரமா ஒரு மீடிங்க்கு போற ஒபாமா ரஜினிய பார்த்த உடனே, நண்பான்னு கத்திக்கிட்டே ஓடி வர்றார்.ஒபாமா பக்கத்துல நின்ன வெள்ளக்காரன்கிட்ட டே இன்னக்கி எல்லாத்தையும் கான்செல் பண்ணிடு , " I need to spend time with Rajni". னு சொல்றார். உடனே சடாரென , அமிதாப்பை பார்த்து , "ரஜினி ஜி ,இது யாரு உங்க அங்கில்-ஆ??" என்று கேட்கிறார் .

இத பார்த்து அமிதாப் ஒரு நிமிஷம் ஆடி போயிடுறார்,
அப்பவும் அவரு மனசு அதை ஒத்துக்கிடலை...
ரஜினி " சரி அமிதாப் உங்களுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தர்றேன், நல்லா யோசிச்சு ஒரு பேர் சொல்லுங்க"
கொஞ்சம் நேரம் கழிச்சு....
அமிதாப் " இப்ப பார்ப்போம், உங்களுக்கு போப் தெரியுமா ?"
ரஜினி கொஞ்சம் கூட அசராம , " வாங்க வாடிகன் போகலாம்".
வாடிகன் சர்ச் வாசல்ல ஒரே கூட்டமா இருக்கு, உடனே தலைவர் "அமிதாப் நீங்க இங்கே இருங்க, எனக்கு இங்க இருக்க செக்யூரிட்டி எல்லாம் நல்லா தெரியும், அதனால நான் மட்டும் உள்ள போறேன் , கொஞ்ச நேரங்கழிச்சு மேல பாருங்க பால்கனில நானும் போப்பும் ஒன்ன வந்து கை காமிக்குறோம்" - னு சொல்லி தலைவர் மட்டும் சர்ச் உள்ள போயிடுறார்.

கொஞ்சம் நேரம் கழிச்சு பால்கனில போப்போட வர்ற தலைவர் கீழ அமிதாப பாத்து கை காமிக்கிறார்.
இத பாக்குற அமிதாப் உடனே மயங்கி கீழ விழுந்திடுறார்.பதறிப்போய் ஓடி வர்ற ரஜினி , அமிதாப்பை எழுப்பி என்ன ஆச்சுன்னு கேக்க,
அமிதாப் " ரஜினி நீங்க போப்போட வந்ததால நான் மயங்கல, என் பக்கத்துல இருந்த ஒரு இத்தாலி நாட்டு வெள்ளக்காரன் ,நீங்க ரெண்டு பேரும் பால்கனில வர்றத பாத்து என்கிட்டே
.
.
.
.
.
.
.
.
.
.
.
" யாரு அது ரஜினி கூட வர்றதுன்னு கேட்டான்" !!!!!!!!
அதத்தான் என்னால தாங்கமுடியல..... !!!!!

அமிதாப் கண்ணா ..இது எப்படி இருக்கு..?!?
Related Posts Plugin for WordPress, Blogger...