Monday, June 13, 2011

வோட்கா இரவுகள் - 00 : 01



துண்டு துண்டாய் 
என் சதைப்பிண்டத்தை நானே 
கூறிட்டுக் கொண்டிருந்தேன்.. 

இறுதிச்சொட்டு 
உயிரிடமிருந்து 
பீறிட்டு பெருக்கெடுக்க
ஆரம்பித்தது அழுகை..  

தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் 
தனயனைப்போல் 
மிகச் சிரத்தையுடன் மிச்சமிருக்கும் 
என் கருநீல உடலை
நீர்த்திவளைகளிலான 
கடலில் 
கரைத்துக்கொண்டிருந்தேன்... 

உள்ளங்கையில் ஜனித்து 
உள் நரம்பெங்கிலும் 
வியாபித்திருந்த உன் வாசம் 
போக்கும் ஒரு வகை 
வேள்வி தான் அது.

நீர்த்தொட்ட நொடியினில் 
ஒரு துளியென தொடங்கி..
தீயென ப்பரவி
அண்டத்தின் மிகப்பெரும் 
வாசனைக்கிடங்காக 
உருமாறிவிட்டிருந்தது 
இந்த பாழாய்ப்போன சமுத்திரம் 

இனி என் செய்வேன்
உன் வாசம் களைய..

- அருண். இரா 


4 comments:

  1. எனக்குக் கவிதைகளைப் புரிந்துகொள்ளும் மனநிலை ரொம்ப கம்மி பாஸ். . தப்பா எடுத்துக்காதீங்க. இது, பின்னொரு நாள்ல எனக்கு புரியலாம். அப்போ மறுபடி வரேன் . . :-)

    ReplyDelete
  2. புரிதலில் சிரமம் உள்ளது.... கவிதைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  3. @ கருந்தேள் : உண்மையா சொல்லணும் நா, எனக்கே இன்னும் சரியாய் புரியலை !! வழக்கமா இல்லாம கொஞ்சம் வித்யாசமான முதல் முயற்சி .. :) திரும்ப வாங்க .. கவலைபடாதீங்க அடிக்கடி இப்படி ட்ரை பண்ண மாட்டேன் :)

    ReplyDelete
  4. @ கருணாகரசு : ஒரு மாதிரி அடைப்பட்ட உள்ளுணர்வுகளுக்கு சொல் வடிவம் கொடுக்க பண்ண முயற்சி.. கண்டிப்பா இன்னும் தெளிவுடன் எழுத முயற்சிக்கிறேன்.. நன்றி பாஸ் !!!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...