Thursday, September 24, 2009
கஸ்டமர் கேர் - லொள்ளு
செல்லுக்கு MMS ஆக்டிவேட் செய்யலாம்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணேன். எல்லா வெவரத்தையும் கேட்டுட்டு PHONE- அ வக்கலாம்னு போகும்போது ,
சார் , உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஆப்பர் இருக்கு சார். உங்களுக்கு மட்டும் இலவசமா ஒரு ADD ON கார்டு தர்றோம் வாங்கிக்கிறீங்களா சார் அப்படினான்.
( ஆஹா நீங்களுமாடா...ஏற்கனவே இப்படித்தான் ஒரு மார்க்கெட்டிங் கால்ல மாட்டி சிக்கி சின்னாபின்னம் ஆனேன்....திரும்பவுமா...) - இந்த தடவை என்ன சொன்னாலும் ஒத்துக்ககூடாது....
"இல்ல எதுவும் வேண்டாம். "
"சார் இது உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆப்பர் சார்...நீங்க காசே கட்ட வேணாம்... "
"இல்லங்க ADDON கார்டு இங்க யாருக்கும் தேவைப்படாது... "
"உங்க லவ்வருக்கு குடுங்க சார்.... "
"லவ்வரெல்லாம் இல்லங்க...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... "
"அதனாலென்ன சார்....உங்க WIFE- க்கு குடுத்துடுங்க சார்...ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்... "
( விடமாட்டங்கிறானே. ... பிட்ட போட வேண்டியதுதான்.....)
"முடியாதுங்க...எனக்கும் என் WIFE- க்கும் டைவர்ஸ் ஆயிடுச்சு.... "
( ஹா ஹா இப்ப என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவே ) .
"சாரி சார்.... தெரியாம சொல்லிட்டேன்... "
"பரவாயில்லை விடுங்க.... "
"சார்...உங்க குழந்தைங்க யாருக்காவது குடுக்கலாமே.... ? "
"அதுவும் முடியாதுங்க... "
"ஏன் சார்... "
"குழந்தை இல்லன்னுதான் என் மனைவியையே நான் டைவர்ஸ் செஞ்சேன்... "
"ஐயேம் வெரி வெரி சாரி சார்.... "
"இட்ஸ் ஓகே... "
"சார் உங்க PARENTS யாருக்காவது.. "
"அதுவும் முடியாதுங்க... "
"ஏன் சார்... "
"பதினஞ்சு வயசுலேயே நான் வீட்ட விட்டு ஓடி வந்துட்டேன்... அவங்கெல்லாம் இப்ப எங்க இருக்காங்கனே எனக்கு தெரியாது... "
"சார் உங்க ப்ரெண்ட்ஸ் யாருக்காவது... "
"அதுவும் முடியாதுங்க...ரொம்ப வருஷமா ஜெயில்ல இருந்துட்டு இப்பதான் வெளில வந்தேன்...அதனால எனக்கு ப்ரெண்ட்சும் யாரும் கெடயாது... "
( அந்த பக்கம் இப்போது லேசாக குரல் தடுமாறியது...)
"சாரி சார் நான் அப்புறம் பேசுறேன்".... டொக் ( போன் கட்டாயிடுச்சு )
( அப்பாடா..வெற்றி வெற்றி ....எப்படியெல்லாம் பேசி இவங்ககிட்ட தப்பிக்க வேண்டியிருக்கு....ஸு...) - அப்படின்னு நெனச்சுக்கிட்டே வாசல் பக்கம் திரும்பினா...
( அய்யய்யோ...!!! )
என் ROOM MATE வாசல்ல நின்னு என்ன ஒரு மாதிரி மொரச்சுட்டு நிக்கிறான்......
( பாவம் , அவன் எங்க இருந்து நான் பேசுனத கேட்டானோ...!!!! )
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக இருக்கு.
ReplyDeleteடேங்க் யூ மச்சான்....!!!
ReplyDeleteபடமா பதிவானு சொல்லலையே....!!!
அடிக்கடி வந்துட்டு போங்க....!!!
ஒய் blood?? சேம் blood??
ReplyDeleteதமாசு தொனியில் யதார்த்தம் ..பின்னுறீங்க சிவன் !
லொள்ளுக்கு லொள்ளு..,
ReplyDeleteநன்றி சுரேஷ் ...
ReplyDeleteநன்றி மழைக்காதலன்...