Tuesday, September 8, 2009

அமானுஷ்யக் குறிப்புகள் (ஒரு உண்மைக் கதை)

இது உண்மையாக நடந்த ஒரு சம்பவம்.




அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி.
நான் அப்ப கல்கத்தா மருத்துவ கல்லூரியில வேலை செஞ்சிட்டு இருந்த நேரம். ஒரு நாள் காலை, என்னுடைய அண்ணனுக்கு உடம்பு சரியில்லை-னு தந்தி வந்துச்சு..கடுமையான காய்ச்சல்னு குறிப்பிட்டிருந்தார்கள்.

அன்று மாலை வரை வேறு ஏதும் தகவல் இல்லை, அதனால அவர் நலமாக தான் இருக்கிறார் என்று நினைத்தேன்.ஏனென்றால் வேறு ஏதாவதாக இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு சொல்லி அனுப்பியிருப்பார்கள். சிறிது நேரத்தில் என் நண்பர்கள் என்னை நாடகம் பார்க்க அழைத்தனர்.நானும் அன்று முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததால் அவர்களுடன் செல்ல சம்மதித்தேன்.

அரங்கத்தில் அன்றைய தினம் காட்சி முடிய இரவு ஒரு மணி ஆனது. நண்பர்களை பிரிந்து என் அறை நோக்கி கல்கத்தாவின் புகழ் பெற்ற "COLLEGE ROAD" வழியாக வந்து கொண்டிருந்தேன்.

பிரகாசமான விளக்குகள் இரவை மறைத்துக்கொண்டிருந்தன.அப்போது சாலையோரத்தில் ஒரு நபர் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து யாருக்கோ காத்து கொண்டிருந்தார். கிட்டே நெருங்கியதும் எனக்கு பேரதிர்ச்சி.என் அண்ணனேதான்.

"இங்க என்ன அண்ணா பண்ணிட்டு இருக்கீங்க ?"

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தேன் "

"ஆனா , உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னு தந்தி வந்தது அப்புறம் எப்படி நீங்க ....?"

"அத விடு, உன் அறைக்கு போயிருந்தேன், நீ நாடகத்துக்கு போயிருக்கிறதா சொன்னாங்க , அதான் இங்க காத்திட்டு இருக்கேன் "

"சரி வாங்க வீட்டுக்கு போய் பேசலாம்"

"இல்ல, ஒரு நிமிஷம் நில்லு...ரொம்ப முக்கியம், நான் போய்ட்ட பிறகு அம்மாவை நீதான் பாத்துக்கணும்"

"ஆனா நீ எங்க போற ? "

"நான் எங்க போறேங்க்றது இப்ப தேவை இல்ல....நீ அம்மாவ பாத்துப்பேனு சத்தியம் பண்ணு "

" கண்டிப்பா பாத்துக்கிறேன், ஆனா நீ எங்க...." - இதை நான் சொல்லி கொண்டிருக்கும்போதே என் அண்ணன் என் பார்வையிலிரிந்து விலகி என் பின்னால் சென்றார்.
ஆனால் நான் திரும்பி பாக்கும்போது அவர் அங்கு இல்லை.என்னால் எதையும் நம்ப முடியவில்லை. அவர் வந்தது , பேசியது ,மறைந்தது.....எல்லாம்.

ஏதும் புரியாமல் நின்ற நேரம், ஒரு காவலர் அந்த வழியே வந்தார், வந்தவரிடம்,

"நீங்க இங்க யாரையாவது பாத்திங்களா சார் ? " என்றேன்.

"ஆமா உன்னுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தானே, எங்கே அவன் ? உன்னிடமிருந்து எதையாவது திருடி விட்டானா ? அவர்கள் தான் உடனே மறைந்து விடுவார்கள்....

" இல்லை இல்லை அவர் என் அண்ணன்தான் - திடீரென்று காணாமல் போய்விட்டார் " - அவர் என்னை குழப்பமாய் பார்த்தார்.

அண்ணனின் பெயரை உரக்க கூறி தேடி பார்த்தேன், ஆனால் பயனில்லை.
கடிகாரத்தில் மணி ஒன்னரை ஆகியிருந்தது. சரி என்று வீட்டுக்கு வேகமாய் நடந்தேன்.

அரை மணி நேரம் முன்னே என்னை தேடி அண்ணன் வந்ததாகவும், இல்லை என்றவுடன் உடனே சென்று விட்டதாகவும் பணியாள் என்னிடம் தெரிவித்தான். அண்ணன் கல்கத்தா வரும் நேரமெல்லாம் அவர் நண்பர் ஒருவருடன்தான் தங்குவார், எனவே விடிந்ததும் அங்கு சென்று பார்க்க முடிவு செய்தேன். ஆனால் விதி வேறு மாதிரி இருந்தது.

___________________________________________________________________________

விடிந்ததும் முதல் செய்தியாய், அண்ணன் இறந்துவிட்டதாய் தந்தி வந்தது.
ஒன்னரை மணிக்கு தந்தி அனுப்பியிருந்தனர். அவர் அதற்க்கு ஒரு மணி நேரம் நேரம் முன்னதாய் இறந்திருக்கலாம் - ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றேன்.

ஒன்னரை மணிக்கி என்னுடன் பேசினார், அதை ஒரு காவலரும், பார்த்தார் வேலையாளும் அண்ணனுடன் பேசியுள்ளான்...கண்டிப்பாக இது கனவு இல்லை....

உடனே ஒரு ரயில் பிடித்து வீடு வந்தேன்.

அண்ணன் சடலமாய் வீற்றிருந்தார்.இரவு பனிரெண்டரை மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றனர். நேற்று என்னை பார்க்கும்போது அணிந்திருந்த அதே உடையை அணிந்திருந்தார். தலையில் சுரீர் என்றது... ஏதோ ஒன்று என்னை சூழ்ந்ததாய் உணர்ந்தேன்....

ஆனால் அவர் என்னுடன் ஒரு மணிக்கு பேசினார்.கண்டிப்பாய் கனவாய் இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் எங்களின் பேச்சு சற்று நேரம் நீடித்தது, அதுவுமன்றி நாங்கள் பேசியதை ஒரு காவலரும் பார்த்தார். குழப்பமாய் இருந்தது.

ஆனா அவர் என்கிட்ட வாங்குன சத்தியம்.......
__________________________________________________________________________

இக்கதை (உண்மை சம்பவந்தாங்க !) எஸ்.முகர்ஜி என்பவருடைய INDIAN GHOST STORIES -இல் இருந்து சுடப்பட்டது. (copy rightsஎல்லாம் கிடையாதே !!!) - இந்த புத்தகத்தில் பல உண்மை சம்பவங்கள் (Approx 50+) இது போன்று விவரிக்கப்பட்டிருக்கிறது. பேய் கதை படிக்க ஆசைப்படுறவங்க இத படிங்க. இந்த புத்தகம் (ஆங்கிலம்தான்) PROJECT GUTENBERG-ல இலவசமா தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


5 comments:

  1. மச்சான்ஸ்....இதுதான் எங்களோட முதல் மொழி பெயர்ப்பு முயற்சி,
    அதனால கதை நடைல நிறைய தவறுகள் தட்டுப்படும்....கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கங்க....!!!!

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு மச்சான்

    தொடருங்கள்...

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி வசந்த் மச்சான்....
    அடுத்த முறை உண்மையிலே அமானுஷ்யக் கதைக்கு முயற்சி பண்றேன்....ஹி ஹி ஹி !!!

    ReplyDelete
  4. கதை..தூள் மச்சி!
    அருமையான மொழிபெயர்ப்பு...

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி கலையரசன்...!!!

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...