இரு கண்ணிமைகள்
தான் வாழ்ந்தன
உன் பார்வை ,
என் மீதினில் -
அதற்கே இங்கு
இதயக் கோளாறு.
பாவம் உன்னுடன்
வரும் தோழிகள் ,
யாரேனும் கனியிருப்ப
காய் கவர்வாரோ ?
"அய்யோ" -
கூடாத சொல்,
தமிழ் அகராதியிலே !
ஆனால் உன்னை
பார்க்கும் போதெல்லாம்
உள்ளுக்குள் மனம்
உச்ச ஸ்தாதியிலே
அலறுகிறது -
"அய்யோ அழகுப் பிசாசு"...!
இது காதலின் முடிவு....!!!
எங்கள் காதலின்
இறுதி அத்தியாயம்
அவளின் திருமண பத்திரிக்கையில்.
இனி கோழியின் காதல்.
உயிருள்ள கோழியின் கழுத்து
ஒரு கையில் - கூரிய வெட்டருவா
மறு கையில் !!!
இமை துடி
நேரத்தில் அருவா கழுத்தை
முத்தமிட கோழியின் வெட்கம்
சிகப்பாய் வழிந்தது.
நாணத்தில் தலை கவிழ்ந்தது
உசிரில்லா பொட்ட கோழி.
காதல்அடங்காத கத்தி
அன்பா பாக்குது கட்டி
வச்சிருந்த அடுத்த கோழியை...!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இத என்னன்னு சொல்ல....!!!
ஊருக்குள் இருந்த ஒரே
ஆஸ்பத்திரிக்கி இன்று விடுமுறை,
டாக்டரின் நாய் செத்துப்போச்சாம் !!!
- சிவன்
அட போங்க சிவன்!! கலந்து கட்டி கிளப்பிட்டீங்க!! ரசிக்கும் படி இருந்தது
ReplyDelete