Wednesday, June 9, 2010
பூண்டாக் செயின்ட்ஸ் - Boon Dock Saints (1999)
இந்த படத்தை பார்த்த உடன் தோன்றியது, க்வெண்டின் டராண்டினோ இந்த படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்றுதான், ஏன்னா படம் கிட்டத்தட்ட அவர் ஸ்டெயிலில் தான் இருந்தது.. (உடனே க்வெண்டின் ரசிகர்கள் சின்ன சின்ன பசங்களோட எல்லாம் க்வேன்டினை கம்பேர் பண்ணுவதா ?, என்றெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது...)
1999-இல் TROY DUFFY-ங்கிற டைரக்டர் இயக்கி வெளி வந்த ஆக்ஷன் க்ரைம் திரைப்படம்தான் இந்த பூண்டாக் செயின்ட்ஸ்.
படத்தோட ஒன் லைன் ஸ்டோரி ரொம்ப சிம்பிள் மச்சான்ஸ், தாங்கள் கெட்டவர்கள் என நினைக்கும் அனைவரையும் கொல்ல முற்படும் இரு சகோதரர்கள். ரொம்ப ஸ்டைலிஷான ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்த படம் திரையில் வெளியிட்ட போது, தோல்வி அடைந்து பின்னர் டி.வி.டி.யில் சக்கை போடு போட்ட படம். CULT FILM என சொல்லப்படும் ஒரு சாராருக்கு மட்டுமே பிடித்ததாக இந்த படம் அமைந்துவிட்டது.
கான்னோர், மார்பி ஐரிஷ் நாட்டை சேர்ந்த கத்தோலிக சகோதரர்கள்.வாரா வாரம் சண்டே ஸ்கூல் எனப்படும் கிருத்தவ மத போதனைகளுக்கு தவறாமல் செல்பவர்கள். அவ்வளவு நல்ல பசங்க. ஒரு நாள் நண்பர்களுடன் புனித.பாட்ரிக்(ST.PATRICK) தினத்தை பாரில் கொண்டாடி கொண்டிருக்கும்போது, ஊருக்குள் புதிதாக ரவுடியிசம் செய்ய வந்திருக்கும் ரஷ்ய மாபியா கும்பலால் தாக்கப்படுகின்றனர் சகோதரர்களும் அவருடைய நண்பர்களும். அந்த மாபியா கும்பலில் வெறும் மூனே மூணு தடி தாண்டவராயன் மட்டும் தான் என்பதால் சகோதரர்களும், அவர்களுடைய நண்பர்களும் ரஷ்ய கும்பலை தாக்க ஆரம்பிக்கின்றனர்.
[கட்]
மறுநாள், ஒரு குப்பை தொட்டி அருகில் மூன்று சடலங்கள் கிடக்க, நம்ம ஸ்பைடர் மேன் வில்லன் வில்லம் DAFOE (தமிழ்ல எப்படி அடிக்குறதுன்னு தெரியலப்பா....அட்ஜீஸ் பண்ணிக்கோங்க :) ) இந்த கொலைகளை விசாரிக்க வருகிறார்.சடலங்களையும், இடத்தையும் ஆராயும் வில்லம், இது தற்காப்புக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்று முடிவுக்கு வருகிறார்.
அன்றே சிறிது நேரத்திற்க்கெல்லாம், சகோதரர்கள் காவல் நிலையத்திற்க்கு சென்று உண்மையை ஒப்பு கொள்கின்றனர். அப்படியே கொசுவத்தி சுருள் வச்சு ப்ளாஷ் பேக்கில் என்ன நடந்தது என்பதும் காண்பிக்கப்படுகிறது. பாரில் நடந்த சண்டைக்காக மீண்டும் பலி வாங்க வரும் ரஷிய தடியன்களை சகோதரர்கள் போட்டு தள்ளும் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. ரஷ்ய மாபியா கும்பலை சேர்ந்த மூன்று பேரை இவர்கள் கொன்றிருப்பதால், போலீஸ் இவர்களை ஹீரோக்களாக பாவிக்கிறது.
அதனால் அன்றே விடுதலை செய்யப்படும் சகோதரர்கள், வெளியில் இருக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கு தெரியாமல் செல்ல வேண்டும் என்று அன்று இரவு மட்டும் லாக்கப்பில் கழிக்கின்றனர். அங்கதான் ஒரு ட்விஸ்ட்டு. இருவர் கனவிலும் வரும் ஏதோ ஒரு சக்தி அவர்களை தீமைக்கு எதிராக தூண்டிகிறது(?).
இங்கதான் ராக்கோ, அப்படிங்கிற நண்பர் (செம இன்டரஸ்டிங்கான கேரக்டர் மச்சான்ஸ்) சகோதர்களோட கூட்டு சேருகிறார். ராக்கோவுக்கு ஊருக்குள் இருக்கும் ரவுடி, கேப்மாரி, சோமாறி, பிஸ்தா, பேட்டை பக்கிரி, மாபியா பாஸ், முடிச்சவிக்கி, கஞ்சா குடிக்கி என எல்லோரின் ஜாதகமும் அத்துபடி. எனவே சகோதர்களின் இந்த தீமைக்கு எதிரான போரில் அவரும் சேர்ந்து கொள்கிறார்.
இங்கதான் படம் டாப் கியர் போட்டு ஆரம்பிக்குது.
மூன்று பேரும் ஊருக்குள் இருக்கும் ஒவ்வொரு பெரிய தலையாக ப்ளான் போட்டு அனாசயமாக போட்டு தள்ளுகின்றனர்.
எடிட்டிங்கிலும், திரைக்கதையிலும் ரவுசு கட்டி ஆடியிருக்காங்க.
உதாரணத்துக்கு ஒரு காட்சி இப்படிதான் நகரும்.
ராக்கோ, யாராவது ஒரு பெரும் புள்ளியை பற்றி பேசுவான். [கட்]
அடுத்த காட்சி, வில்லம்-க்கு கொலை நடந்ததாக போன் வரும். [கட்]
சம்பவ இடத்துக்கு விரையும் (?) வில்லம், அங்கிருக்கும் ஒவ்வொரு ஆதாரத்தையும் வைத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க, [கட்]
திரையில் அந்த காட்சிகள் காட்டப்படும். NON LINEAR EDITING DONE WITH A CLASSIC TOUCH.
இப்படி யாருக்கும் தெரியாமல் சகோதரர்கள் மர்ம தேசம் கருப்பு சாமி போல எல்லாரையும் போட்டு தள்ள, போலீசும் மாபியா கும்பல்களும் இவர்களை நாலா பக்கமும் தேடுகின்றனர். வேறு வழியே இல்லாமல் மாபியா கும்பல் தலைவன் ஒருவன் இவர்களை போட்டுத்தள்ள பல வருடங்களாக சிறையில் இருக்கும் ட்யூஸ்[DUCE] என்ற ஒரு கொடூர கொலைகாரனை(?) வெளியே கொண்டு வருகிறான். ட்யூசும், நம்ம சகோதரர்களும் மோதும் நேரடி காட்சிகள் பர பர பட்டாசு...
அதற்க்கப்புறம் வரும் ஒரு கடைசி ட்விஸ்ட்டு, ஒரு துப்பாக்கி சண்டை என படத்துக்கு சுபம் போடுகின்றனர். WILLAM DAFOE சில காட்சிகளில் மொக்கை போட்டாலும் பல காட்சிகளில் மனுஷன் நடிப்பில் கலக்கிவிடுகிறார்.
மொத்தத்தில் பூன்டாக் செயன்ட்ஸ் ஒரு அட்டகாசமான ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் மச்சான்ஸ்.பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
அருமை மச்சான்ஸ்
ReplyDeleteரசிக்கும் படியான விமர்சனம் மச்சான் படமே பார்த்ததுபோல...வாழ்த்துகள் மச்சான்..
ReplyDeleteநன்றி கனி மச்சான்....
ReplyDeleteநன்றி உலவு.....