Monday, October 18, 2010

பேட்டில் ராயேல் Battle Royale (バトル・ロワイアル Batoru Rowaiaru - 2000




குடும்பம் குட்டி குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டிய ஒரு உன்னத காவியம், இந்த ஜப்பானிய திரைப்படம். உங்களுக்கு தக்காளி சாஸ் பிடிக்குமா? இந்த படத்தில் பல காட்சிகள் அப்ப உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்..

ஓகே ஓகே கொஞ்சம் சீரியஸா பேசலாம். :)

பேட்டில் ராயேல்(Battle Royale) 2000-ம் வருடம் ஜப்பானில் வெளிவந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். படத்தோட கதையை பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்த பத்தின பிரபல விமர்ச்சகர்களோட கருத்தை பார்ப்போம்.

"This is a heart-stopping action film, teaching us the worthy lessons of discipline, teamwork, and determination, but wrapping them up in a deliberately provocative, shockingly violent package. ""

படத்த பத்தி ஒரு போர்த்துகீசிய விமர்சகர் இன்னா சொல்றார்னா,

"Os intertítulos e o excesso de flashbacks comprometem um pouco o ritmo do filme, mas, de modo geral, a ação é muito bem conduzida e os personagens, satisfatoriamente desenvolvidos" - (ஒன்னும் புரியலனா free வுட்ருங்க, ஏன்னா எனக்கும் ஒன்னும் புரியல..)



ரத்தத்திற்கு பயப்படுபவர்கள், வீக் பாடிஸ், இளகிய நெஞ்சம் படைத்தவர்கள், குழந்தைகளை விரும்புவர்கள் - மச்சான்ஸ், இந்த படமும் பதிவும் உங்களுக்கானது அல்ல, நம்ம அடுத்த பதிவுல பாப்போம், வருகைக்கு நன்றி.
மத்த மச்சான்ஸ் பாலோ மீ..

ஒரு நூற்றாண்டின் விடியலில் ஜப்பான் தேசத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது, பெரியவர்களுக்கு வருங்கால சங்கதியினரின் மீதான நம்பிக்கையே போய்விட, அவர்களை ஒழுங்கு படுத்தும் பொருட்டு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுகின்றனர். அதுதான் Millenium Education Reform (அ) B .R ACT - Battle Royale Act.


அது என்ன அப்படி ஸ்பெஷல் சட்டம் என்றால், ஏதோ ஒரு பள்ளியின், ஏதோ ஒரு வகுப்பு மாணவர்களை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும், அவர்கள் அனைவரும் ஆள் அரவம் இல்லாத ஒரு தனி தீவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே அவர்கள் ஒரு கேம் விளையாட வேண்டும். "ப்பூ அவ்வளவுதானா..." என்பவர்கள் பின் வரும் விளையாட்டின் விதிகளை படிக்கவும்.

--இந்த விளையாட்டு மூன்று நாட்கள் நடைபெறும், தீவுக்குள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம்.
--இந்த விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கொல்ல வேண்டும், நீங்கள் படித்தது சரிதான், மற்ற அனைவரையும் கொல்ல வேண்டும்.கடைசியில் இருக்கும் ஒருவரே வெற்றி பெற்றவர், அவர் மட்டும் வீட்டுக்கு போகலாம்.
--ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீதம் இருந்தால் அனைவரும் கொல்லப்படுவர்.
--ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு உலோக பட்டை உண்டு, அதை வைத்து அவரை ரிமோட் மூலம் கொல்ல முடியும்.
--முழு தீவும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது, அவ்வப்போது ஒரு பகுதி டேஞ்சர் ஜோன் என்று அறிவிக்கப்படும், அப்போது அந்த பகுதிகளில் இருப்பவரின் காலர் பட்டைமூலம்  அவர் கொல்லப்படுவார்.
--ஒவ்வொருவருக்கும் ஒரு பை கொடுக்கப்படும். அதில் கொஞ்சம் உணவு, கொஞ்சம் தண்ணீர், தீவின் வரைபடம் மற்றும் ஏதேனும் ஒரு ஆயுதம் இருக்கும்.



ஷுயா நானாஹரா நண்பர்களுடன் (ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ) பள்ளி மூலம், சுற்றுலா செல்ல, அனைவருக்கும் மயக்க வாயு செலுத்தி, அரசாங்கம் அவர்களை அந்த தனி தீவில் சேர்க்கிறது. அனைவரும் மயக்கம் தெளிந்து எந்திரிக்க, அனைவரின் கழுத்திலும் உலோக பட்டை அணிவிக்கப்படிருக்கிறது. ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர்களின் பழைய ஆசிரியர் ஒருவர் உள்ளே நுழைகிறார். இவர்தான் இந்த கேம்ஷோவை நடத்த போகிறவர்.

நானாஹரா- வின் வகுப்பு தோழர்கள் நாற்பது பேர், அத்துடன் மாற்றம் ஆகி வந்த வேறு பள்ளி மாணவர்கள் இருவர் என்று மொத்தம் நாற்பத்தி இரண்டு பேர் இந்த கேம் ஷோவிற்கு வருகின்றனர். அனைவருக்கும் விதிகள்
சொல்லப்பட்டு, ஆளுக்கு ஒரு பை கொடுத்து அனுப்பி வைக்கிறார் ஆசிரியர். விதிகள் சொல்லும்போதே ஒரு பெண் எதிர்த்து பேச, அவள் அங்கேயே கொல்லப்படுகிறாள். அதே போல் கழுத்து பட்டையின் செயல்பாட்டினை
விளக்க, ஒரு மாணவனின் தலையையும் வெடிக்க வைக்கிறார் ஆசிரியர்.

மீதம் உள்ள நாற்பது பெரும் , வெளியே செல்ல, மூன்று நாட்கள் என்ன நடக்கிறது, எத்தனை பேர் கொல்லப்படுகின்றனர், கடைசியில் யார் ஜெயித்தார் என்பதே கதை.



ஒரு சிலர் மற்றவர் அனைவரையும் கொன்று விட வேண்டும் என துடிக்க, ஒரு சிலர் யாரையும் கொல்லாமல் மூன்று நாட்களை உயிருடன் கடக்க முயற்ச்சி செய்கின்றனர், படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை,ஸ்பெஷல் எபக்ட்ஸ் மற்றும் இயக்குனர். படத்தில் வரும் லைட் ஹவுஸ் காட்சி ஒன்றே இதற்கு போதும். மனுஷன் அந்த சீன்ல பூந்து விளையாடி இருப்பார். ஒருவரை மட்டுமே கதை மையம் கொல்லாமல் நாற்பது பேரையும், அவர்களின் செயல்களையும் காண்பிக்க திரைக்கதை முயற்சி செய்திருக்கிறது.

ஒரு அல்டிமேட் த்ரில்லர் படம் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

படத்தின் ட்ரைலர் இதோ.


Thursday, October 14, 2010

சிட்டி ஆப் காட் - City of God - Cidade de Deus - 2002

வெகு நாள் கழித்து ஒரு பதிவு.. !!!


அதே போல் நான் வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த படத்தை பற்றிதான் இந்த பதிவும். படத்தின் பெயர் - City of God . 2002 இல் வெளி வந்த இந்த பிரேசிலிய நாட்டு க்ரைம் மாபியா திரைப்படத்தை பெர்னாண்டோ மீரல்ஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

பல இடங்களில் "பார்க்க வேண்டிய படங்களின்" வரிசையில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அதனால்தான் மச்சான்ஸ், ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்க ஆர்வம். நம்முடைய நாட்டில் கொஞ்சமும் எதிர் பார்க்க முடியாத கதை மற்றும் கதைக்களம்.



பிரேசில் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது கதை. ரியோ நகரத்தின் புறநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு புதிய குடியிருப்பு பகுதியின் பெயர்தான் "சிட்டி ஆப் காட்". இந்த சிட்டி ஆப் காட் நகரத்தின் தெருக்களில் ஓடி விளையாடும்(????) சிறுவர்களை பத்திதான் படம். முழுப்படமும் ராக்கெட் என்ற சிறுவனை முதன்மை பாத்திரமாக நிறுத்தி (இவர் இந்த படத்தின் ஹீரோ இல்லை...), அவனின் கண்ணோட்டத்தில் ஆரம்பித்து முடிகிறது.

தடதடக்கும் இசையுடன் தொடங்குகிறது படத்தின் முதல் காட்சி. சமைப்பதற்காக கட்டி வைக்கப்பட்டிருத்த கோழி தப்பித்து ஓட, அதை ஏராளமான சிறுவர்கள் துப்பாக்கியுடன் துரத்துவதாக ஆரம்பிக்கிறது. (கோழியையே துப்பாக்கியுடன் துரத்தும்போதே யோசித்திருக்க வேண்டும் படம் எப்படி இருக்கும் என்று..!!!).

இந்த இடத்தில் தான் கோழியை துரத்தும் கும்பலின் எதிரில் வருகிறான் நம்ம கதை சொல்லி (Narrator) ராக்கெட் . அதே நேரம் ரோட்டின் மறு புறத்தில் இந்த ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் வந்து சேர்கிறது, இரண்டு பக்கமும் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இவர்களுக்கு இடையில் ராக்கெட் மாட்டிக்கொள்ள, ஒரு 180 டிகிரியில் காமெரா அவனை சுழல்கிறது, காமெரா அவன் கண்ணை காண்பிக்க, " நான் எப்படி இந்த இடத்தில் ?? " - என்று கதை சொல்ல தொடங்குகிறான் ராக்கெட்.



அப்படியே படம் பின்னோக்கி பயணித்து 1960 - களில் தொடங்குகிறது, சிட்டி ஆப் காட் நகரம் எப்படி உருவானது, மக்கள் எப்படி உயர் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இங்கு வந்து சேர்கின்றனர், ஏழ்மையை போராட சி.ஆ.கா மக்கள் செய்யும் சின்ன திருட்டு, வழிப்பறி அனைத்தும் ராக்கெட் மூலமாக நமக்கு விவரிக்கப்படுகிறது. இப்படி சிறு திருட்டுகளை செய்யும் "டெண்டெர் ட்ரையோ " என்ற மூவரிடம் இருந்து கதை தொடர்கிறது.

இந்த மூவரையும் ஹீரோ போல் பாவிக்கும் ஒரு பொடிசு லில்-ஸே. ஒரு கட்டத்தில் மூவருக்கும் பணம் தேவைப்பட, லில்-ஸேவின் ஐடியாப்படி ஒரு மோட்டலை(விடுதி) கொள்ளை அடிக்க போகின்றனர் நால்வரும் (லில்-ஸே உட்பட..). அங்கு ஏற்படும் சில எதிர்பாரா சம்பவங்களும், அதனை தொடரும் சில பல கொலைகளும் கால ஓட்டத்தில் லில்-ஸேவை எப்படி ஒரு மாபியா கும்பலுக்கு தலைவன் ஆகிறான் என்பது வரை வந்து நிற்கிறது படத்தின் முதல் அத்தியாயம்.



பின் வரும் அத்தியாங்களில் ராக்கெட் இந்த கறைபட்ட சமூகத்தில் இருந்து விடுபட்டு எப்படி கரையேறுகிறான் என்றும், மறுபுறம் லில்-ஸே போதை பொருள் மார்க்கெட்டை தன் கைக்குள் கொண்டு வருவதையும் விவரிக்கின்றது. இந்த காட்சிகளில் குறிப்பிடப்படவேண்டியது நடுவில் வரும் ஒரு "அப்பார்ட்மென்ட்டின் கதை". ஒரு அப்பார்ட்மென்ட்டை மையமாக வைத்து, அங்கு முதலில் குடி இருந்த பெண்ணிடம் இருந்து எப்படி போதை வியாபாரம் பல கைகளுக்கு மாறி கடைசியில் லில்-ஸே எப்படி அதை கைப்பற்றுகிறான் என்பது வரை, அந்த அப்பார்ட்மென்டின் கண்ணோட்டத்திலேயே அதை விவரிப்பது சுவாரஸ்யம்.

லில்-ஸே தன் நண்பன் பென்னியுடன் சேர்ந்து மொத்த நகரத்தையும் அபகரிக்க முற்ப்படும்போது, கேரட் என்ற இன்னொரு மாபியா தலைவனுடன் மோத நேர்கிறது, அதே நேரம் ராக்கெட்டின் காதல் முயற்சி, மாபியா முயற்சி என அனைத்தும் தோல்வி அடைகிறது. உதாரணம் : ஒரு பேக்கரியை கொள்ளை அடிக்க ராக்கெட்டும் அவன் நண்பனும் துப்பாக்கியுடன் செல்ல, அங்கு இருக்கும் பெண் அழகாக இருப்பதால் கொள்ளை அடிக்க மனம் இன்றி அந்த பெண்ணின் போன் நம்பருடன் திரும்புகிறான் ராக்கெட். பய புள்ள நம்ம இனம்.



லில்-செயின் நண்பன் பென்னி கொல்லப்பட, கேரட் மீதான லில்-ஸேவின் வெறியாட்டம் தொடங்குகிறது. இதற்கிடையில் லில்-ஸேவிற்கு எதிராக நாக்அவுட் - நெட் என்கிறவரும் கேரட்டின் மாபியாவில் சேர்ந்துகொள்ள (இது ஒரு தனி கிளைக்கதை), இரு கும்பலுக்கும் ஒரு பெரிய போரே தொடங்குகிறது. இவர்களுக்கு இடையில் ராக்கெட் வந்து சேர்ந்தது எப்படி, அந்த கோழி பிடிக்கும் முதல் காட்சி என்ன ஆனது என்று பல சுவாரஸ்யங்கள்- உடன் படம் தொடங்கியே இடத்திலேயே படத்தை முடித்திருப்பது டைரக்டர் டச்.
இன்னும் படத்தில் சுவாரஸ்யங்களும் கிளைக்கதைகளும் ஏராளம்..!!!



க்ரைம், போதை, கொக்கைன், மாபியா, லஞ்சம், வறுமை என பிரேசில் நாட்டின் அணைத்து இருண்ட பக்கங்களையும் வெளிச்சத்துக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்ப்பரிக்கும் இசை (பல காட்சிகளில் அந்த காட்சியின் டெம்போவிற்கு ஏற்ப நம்மையும் ஆட வைக்கிறது ), காமெரா (அற்புதமான ஒலியமைப்பு, ஒரு டார்க் தீம் படத்திற்கான முன்னோடி ) மற்றும் இதுவரை எங்கும் பார்த்திடாத இந்த படத்தின் நடிகர்கள்..மிக மிக யதார்த்தம்.

நான்கு ஆஸ்கார் நாமினேஷன் உட்பட பல விருதுகளை குவித்த இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்....!!!!


படத்தின் ட்ரைலர்



-------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, July 26, 2010

மை லிட்டில் ப்ரைட் 어린 신부 My Little Bride - 2004




பெரியவர்களின் வற்புறுத்தலாலும், மரணப் படுக்கையில் இருக்கும் தாத்தாவின் ஆசைக்காகவும் சிறுவயதில் இருந்து அண்ணன் தங்கை போல் பழகி வந்த இருவருக்கு கல்யாணம் செய்ய நேரிடுகிறது.....ச்சே...இதே கதையை எத்தன படத்தில் பார்த்திருப்போம் என்பவர்கள், நிற்க....!!! இதே கதையை கண்டிப்பாக நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த திரைக்கதையும், கதை பாத்திரங்களும், காட்சிகளும் உங்களை சிரிக்க வைக்கும், உற்சாக படுத்தும், ஏக்கப்படவும் வைக்கும்....கண்டிப்பாக மச்சான்ஸ்...


மை லிட்டில் ப்ரைட் 2004 -ல் கொரிய மொழியில் வெளிவந்த ஒரு ரொமாண்டிக் நகைச்சுவை திரைப்படம்.



சங்க்மின், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக தன்னை தயார் படுத்திகொண்டு இருக்கும் ஒரு இளைஞன். படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு வெகு நாள் கழித்து வீட்டுக்கு வர, வீட்டுக்கு வந்தவுடன் தாத்தா ஒரு குண்டை போடுகிறார் (ஒரு சின்ன பிளாஷ்பேக் எல்லாம் சொல்லுவார்). அதே வீட்டில் இருக்கும் தனது பேத்தி புவ்னா-வை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். இதுல என்ன ஸ்பெஷல் மேட்டருன்னா புவ்னா இன்னும் பள்ளி படிப்பை கூட முடிக்காத பதினைந்தே வயது நிரம்பிய குட்டி பெண்.

சங்க்மின், புவ்னா இருவருமே எதிர்ப்பு தெரிவிக்க, தாத்தா (வில்லங்கமான) ஒரு சின்ன ஆசுபத்திரி நாடகத்தை அரங்கேற்றி வேலையை முடிக்கிறார். கல்யாணத்திற்கு பிறகும் புவ்னா தன படிப்பை தொடர்வாள் என்றும், அதுவரை காச் மூச் கஸமுஸா கூடாது என்ற சில கட்டுபாடுகளுடன் அவர்களின் பெற்றோர் இந்த திருமணத்தை நடத்துகின்றனர்.



இந்த இடத்தில் புவ்னாவை பத்தி கொஞ்சம் பார்ப்போம், இந்த படத்தோட உயிர் நாடியே இந்த புவ்னா கேரக்டர் தான். மூன் யங் என்கிற குட்டி பெண்தான் இந்த படத்தின் புவ்னா.படம் முழுக்க தன குழந்தைத்தனமான நடிப்பாலும், குறும்புகளாலும், அந்த கொரிய மொழிக்கே உரித்தமான ஸ்லாங்கில் இவர் இழுத்து இழுத்து பேசும்போது நம்மை கவர்ந்து விடுகிறார். புவ்னா கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக வயது இருந்தாலும், இன்னொரு காரணமும் உண்டு. அந்த காரணத்தின் பெயர் ஜங்க்வூ. ஜங்க்வூ அவர்கள் பள்ளியின் பேஸ்பால் வீரன். புவ்னாவிற்கு ஜங்க்வூ மீது ஒரு ஈர்ப்பு மற்றும் ஒருதலையாய் காதல். இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே , அனைத்தையும் மீறி புவ்னாவிற்கு சங்க்மினுடன் திருமணம் முடிந்துவிடுகிறது.


புவ்னாவின் திருமணம் அவள் பள்ளியில் தெரிந்தால், படிப்பு பாழ் ஆகிவிடும் என்பதால், தலைமை ஆசிரியர் தவிர மற்ற அனைவரிடமிரிந்தும் மறைக்கப்படுகிறது. இது புவ்னாவிற்கு வசதியாய் போய்விட, ஜங்க்வூ உடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, இருவரும் உல்லாசமாய் ஊர் சுற்றுகின்றனர். அதே நேரம் சங்க்மின்னும், புவ்னாவும் தனி வீட்டிற்கு குடி பெயர்கின்றனர்.


நோட் பண்ணிக்கங்க : இந்த புது வீட்டில் வரும் "ஜட்டி" சீனும், பென்சில் சீனும் செம காமெடி...!!! இரண்டிலுமே புவ்னாவின் அந்த முக பாவனைகள் கலக்கல்.

இருவரின் வாழ்க்கையும் தொடர்ந்து இப்படியே போய்க்கொண்டிருக்க, இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்டு, சங்க்மின்னுக்கு புவ்னா படிக்கும் அதே பள்ளியில், ஓவிய ஆசிரியராக வேலை கிடைக்கிறது. முன்னறிவிப்பின்றி திடீரென பள்ளியில் தோன்றும் சங்க்மின், பின்னர் புவ்னாவுடன், நம் உறவு யாருக்கும் தெரியக்கூடாது என்ற ஒப்பந்த்தத்துடன் பள்ளியில் தொடர்கின்றனர்.




பள்ளியில் ஒரு இளம் வாத்தியாராக சங்க்மின் வளம் வர, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் அவர் மேல் ஒரு தனி அட்டென்ஷன் வந்துவிடுகிறது. அட, வயசு பொண்ணுங்களுக்கு வந்தா பரவாயில்லை, அதே ஸ்கூல்ல வேலை பார்க்குற, கிம் அப்படிங்குற ஒரு டீச்சருக்கும் ஈர்ப்பு வந்துடுது. கிம் வேணும்னே வந்து வந்து சங்க்மின் கிட்ட வழியும் காட்சிகள், ரவுசு காமெடி.

சில பல, ட்விஸ்ட்டுகளுடன் சங்க்மின்னும் புவ்னாவும் எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சேர்கின்றனர் என்பதுதான் மீதி கதை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பாய் பார்த்து என்ஜாய் செய்ய வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ். படம் முடிந்தவுடம் ஐயோ படம் முடிந்து விட்டதே என்று தான் தோன்றியது :)


நோட் பண்ணிக்கங்க : இடையில் ஒரு பெரிய்ய்ய்ய சுவற்றில் புவ்னா படம் வரைய வேண்டி வரும், அந்த சுவற்றை பார்த்தவுடன் இந்த பொண்ணு செம க்யூட்ட ஒரு ரியாக்ஷன் விடும் பாருங்க...ப்ச்...பார்த்துட்டு வாங்க பேசுவோம்...!!!

"MY WIFE IS 18 " என்ற ஹாங் காங் நாட்டு திரைப்படத்தின் தழுவல் தான் இந்த படம். கொரிய படங்கள் என்றாலே ரியாலிட்டி, உலகத் தரம், கொடூரம், ரத்தம், சதை என்ற என் நினைப்புகளை (ஏன்னா நம்ம பார்த்த படங்கள் எல்லாமே அப்படிதான்) லேசாய் மாற்றியது "MY SASSY GIRL" படம். இந்த படம் அந்த நினைப்பை தகர்த்து விட்டது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க மச்சான்.


Friday, July 23, 2010

ஒரு சின்ன குறும்படம்

சசிகுமார் இயக்கிய ஒரு அழகிய குறும்படம்...
அந்த குழந்தையை போல, எனக்கும் பார்த்தவுடன் '' ப_._வேண்டும்" என்று தோன்றியது.... :)

Tuesday, July 13, 2010

லீடர் - Leader - లీడర్ (2010)




நமக்கு தெலுங்கு படம் பார்க்கும் சில நண்பர்கள் உண்டு மச்சான்ஸ், அவ்வப்போது சில நல்ல படங்களை (உலக தரம் எல்லாம் இல்லீங்க, நல்ல காமெடி, ஆக்ஷன், மசாலா மட்டுமே..!!!) நமக்கும் சொல்லி பார்க்க சொல்வார்கள். நமக்கும் தெலுங்கு நல்லாவெல்லாம் தெரியாது, அரை குறை தான், நன்றி சப்டைட்டில் சாமி. இப்படிதான் போக்கிரி(தெ), சை, விக்ரமாற்குடு, ஸ்டாலின் என்று பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன்.

இப்படி சமீபத்தில் பார்த்த படம்தான் லீடர். டைரக்டர் சேகர் கம்முலாவின் படம். ஹாப்பி டேஸ் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் (ஆந்த்ராவிலும், கேரளாவிலும் கூரையை பிய்த்துக்கொண்டு ஓடிய படம்). வெகு நாட்களாக டவுன்லோட் செய்து வைத்திருந்து சப்டைட்டில் இல்லாததானால் பார்க்கமலேயே வைத்திருந்தேன், நேற்றுதான் முழுப்படமும் யு-ட்யூபிலேயே கிடைத்தது (சப்டைட்டிலுடன் - நல்ல பிரிண்ட்டு !!!!)




நக்சலைட்டுகள் ஆந்திராவின் முதலமைச்சர் சுமனை குண்டு வைத்து கொல்வதில் இருந்து தொடங்குகிறது கதை. அர்ஜுன் பிரசாத், முதலமைச்சர் சுமனின் மகன் - அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பெரிய கம்பெனியை நடத்துபவர். அப்பாவை மரணப் படுக்கையில் காண இந்தியா விரைகிறார். சுமன் தான் இறக்கும்போது, அர்ஜுனிடம் நீதான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தன் கடைசி ஆசையை சொல்லி விட்டு
இறந்து போகிறார்.

ஆட்சியில் உள்ள சாதிக்கட்சியின் தலைவர் பெத்தைனா-வாக கோட்டா சீனிவாசராவ். இவர்தான் ஆந்த்ராவின் கிங் மேக்கர். சுமன் இறந்துவிட்டதால் ஆட்சி கலையாமல் இருக்க, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமனின் மற்றொரு உறவினரான சுப்புராஜ் (இவர்தாங்க வில்லன் ) என்பவரை முதல்வராக்க முடிவெடுக்கிறார். பெத்தைனாவுக்கு சுமனின் கடைசி ஆசை அப்போது தெரியாது.




சுமனின் இறுதி சடங்கில் அர்ஜுனை சந்திக்கும் பல பெரும்புள்ளிகள், முதலமைச்சர் என்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து வைத்துள்ளார் என்று பெரிய பெரிய தொகையாக சொல்கின்றனர். சுமனின் டைரிக்குறிப்பு ஒன்றில் ஒரு வீட்டை பற்றி எழுதியிருக்க, அங்கு சென்று பார்க்கும் அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சி, அங்கே கட்டு கட்டாக அறை முழுவதும் பணம் (நம்ம அருணாச்சலம் படத்துல வந்த மொத்த பணத்தையும் இங்க கொண்டு வந்துட்டாங்க).

இதுநாள் வரை நல்லவர் என்று நினைத்திருந்த தன் தந்தையும், ஒரு சராசரி லஞ்ச அரசியல்வாதி என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த எடத்துல நம்ம ஹீரோவின் மனசை மாத்துறா மாதிரி ஒரு பாட்டு . மக்களின் பல அவலங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள்.




இறுதியில் ஹீரோ அர்ஜுன் தானே முதலமைச்சர் ஆவது என முடிவு செய்தது தன்னிச்சையாக (பெத்தைனாவுக்கு தெரியாமல்) காரியத்தில் இறங்குகிறார். மற்றொருபுறம் சுப்புராஜை முதலைமச்சர் ஆக்க கட்சி பணிகளும் செய்யப்படுகிறது. அர்ஜுன், சுமன் சம்பாதித்து (கொள்ளையடித்து) சென்ற பல்லாயிரம் கோடி( 1,00,00,00,00,000 தோராயமா இத்தினி ரூபா மச்சான்ஸ்) ரூபாயை வைத்து எப்படி சதி செய்து ஆட்சியில் அமர்கிறார் என்பது தான் முதல் பாதி படத்தின் கதை.

ஆட்சிக்கு வரும் ரானாவிற்கு சுப்புராஜ் குடைச்சல் குடுக்க, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதும், நாட்டை நல்வழி படுத்த என்னென்ன செய்கிறார் என்பதையும் இந்த கால கட்ட அரசியலுக்கு ஏத்தார் போல் (மனதில் வைத்துக்கொண்டு) விறுவிறுப்பாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து வெள்ளித்திரையில் தூள் செய்திருக்கிறார் டைரக்டர் சேகர் கம்முலா. படம் கிட்டத்தட்ட முதல்வன் கொஞ்சம் சிவாஜி கொஞ்சம் என ஷங்கர் ஸ்டைலில் அமைந்திருக்கிறது. இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வருவேண்டும் என்பதே படத்தின் பிரதான மெசேஜ்.




அர்ஜுன் பிரசாத்தாக புதுமுகம் ராணா, கதைக்கு ஏத்தாற்போல் அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு. அப்புறம் ரெண்டு ஹீரோயின்ஸ். முதல் பாதியில் வாமணன் பட நாயகி ப்ரியா ஆனந்த். இந்த படத்தில் கலக்கிவிட்டார் ரசிக்கும்படியான குறும்பு நடிப்பு. வாமணன் கேரக்டர்க்கு அப்படியே நேரெதிர், இந்த படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் CHATTER BOX . இரண்டாம் பாதியில் ரிச்சா (ரிச்சா பல்லோடு இல்லீங்க.. ) , இந்தம்மினி அமெரிக்க இறக்குமதி, செம ஹோம்லி, நடிப்பிலும்(?) கலக்கிட்டாங்க (ஹி ஹி)..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் மச்சான்ஸ்..

பி.கு : குத்துப்பாட்டு, மஞ்சா, பச்சை, செகப்பு சட்டை டூயட்டுகள் இல்லாத தெலுங்கு படம்.

படம் பார்ப்பதற்கான யு-ட்யூப் லிங்க்....
Part - 1
http://www.youtube.com/watch?v=qvBvJZOldjA

---------------------------------------------------------------------------------
Directed by Sekhar Kammula
Produced by AVM
Written by Sekhar Kammula
Starring Rana Daggubati, Richa Gangopadhyay, Priya Anand, Suhasini Manirathnam
Music by Mickey J Meyer
Cinematography Vijay C. Kumar
Editing by Marthand K Venkatesh
Studio AVM Productions

---------------------------------------------------------------------------------




--------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஹைக்கூ....


திரௌபதி தேசம்


உள்ளாடை தெரிய
அணியும் மினி-ஸ்கர்ட்டில் -
"MADE IN INDIA".

-----------------------------------------------------------------------------

Wednesday, June 16, 2010

ஏன் இவர்கள் இப்படி ?






காட்சி 1:


வெகு நாள் கழித்து சென்னைக்கு ரயில் வழியாக பயணம் செய்ய நேரிட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை ரயில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ரயில்வே பார்சல் ஆபீசின் தனித்துவம் நிறைந்த ஒரு தனி வாசம் நம்மை எப்போதும் வரவேற்கும். அன்றும் அந்த வாசனை எங்கள் ரயிலை வரவேற்த்தது. நம்ம சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒரு குட்டி இந்தியான்னே சொல்லிடலாம், அனைத்து மாநிலங்களின் எல்லா இன மக்களையும் இங்க பார்க்கலாம். இவ்வளவு பேரையும் பார்த்துட்டு, அவங்களோட இன்னும் ரெண்டு பேரை பார்க்க நேரிட்டது, அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.


ரயில் நின்றவுடன், ஸ்டேஷனை விட்டு வெளியே செல்லும் வழியில் மக்களோடு மக்களாய் முன்னேறி கொண்டிருந்தேன். சென்ட்ரல் ஸ்டேஷனில் நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கலாம், ரெண்டு பெரிய திரையில் ரயில்களின் நேர அட்டைவனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அந்த திரைக்கு முன்னாடி இருக்கும் இருக்கைகளில் எப்போதுமே மக்களை காணலாம், பெரும்பாலும் வட இந்தியர்கள் குடும்பங்களோடு அமர்ந்திருப்பார்கள்...இப்படி ஒவ்வொரு விஷயமாக கவனித்துக்கொண்டு வரும்போதுதான் அந்த இருக்கைகளின் ஊடே அந்த சோகத்தையும் கவனிக்க நேர்ந்தது.


ஒரு இளம் பெண்(அ) தாய் மயக்கத்திலோ உறக்கத்திலோ தரையில் விழுந்து கிடந்தாள். அவள் அருகிலேயே ஒரு தவழும் கைக்குழந்தை. உடைகள் களைந்து மார்புகள் திறந்து கேட்பார் நாதியின்றி அந்த பெண் கிடக்க, குழந்தையோ இந்த கேடு கெட்ட உலகத்திற்கும் எனக்கும் துளி அளவும் தொடர்பில்லை என்று அதன் உலகத்தில் தனியாய் சிரித்து தானாய் விளையாடிக்கொண்டிருந்தது. எப்படி அங்கே வந்தாள், ஏன் அங்கே வந்தாள், எதையாவது பரிகொடுத்தவளா ? கூட வேறு யாராவது ?, இந்த விவரங்கள்
அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது. அனால் அவள் அங்குதான் வெகு நேரமாய் கிடக்கிறாள்.


அவர் அவர் வேலையில் பறக்கும் இந்த உலகத்தில் ஏனோ தனியாய் கிடக்கும் இந்த பாவப்பட்ட ஜென்மத்தை கேட்க நாதிஒன்றுமில்லை. ஏதும் செய்ய இயலாதவனாய் இந்த உலகத்தின் பத்தோடு பதினொன்றாவது 'அது'-வாக நானும் வெளியேறுகிறேன். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியுடன்.


"என்ன பாவம் செய்தாலோ? ,
போதைல கிடக்கிறா...
எவன் பின்னாடியாவது ஓடியிருப்பா,
என்னவெல்லாமோ ஏசியது உலகம்,
உதவாமல் ஏசியவர்களை,
திட்டிக்கொண்டே வெளியேறுகிறேன் - நான்".
....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...


காட்சி 2:

"நான்" - "அது"-வாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தேன். தாம்பரம் செல்லும் மின் ரயில் வண்டியை பிடிக்க அருகில் இருக்கும் பார்க் ரயில் நிலையத்திற்கு விரைந்த வேளையில்தான், அந்த இரண்டாவது நபரை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய உடன், வலப்பக்கம் திரும்பினால், புற நகர் செல்லும் ரயில்களின் நிலையம் தனியாக இருக்கும். அதை கடந்துதான் பார்க் ஸ்டேஷனுக்கு செல்ல முடியும். அது ஒரு நூறடி நீளமுள்ள நேர் சாலை. ஆட்டோக்களும், டாக்சிகளும் சவாரிகளை பிடித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த சாலையில்தான் பறந்துகொண்டிருந்தது.


அப்போது என்னை கடந்த ஒரு டாக்சியின் பின்புறம், ஏதோ தொற்றிக்கொண்டு செல்வதை உணர்ந்து பார்த்தேன். ஒரு சிறுவன் பத்து வயதிருக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டு மடிந்து போன கால்கள், மரப்பலகையில் சக்கரம் வைத்து, அதில் நகரும் சிறுவன். அந்த டாக்சியின் பின்னால் உள்ள BUMPER - ஐ பிடித்துக்கொண்டு, அதன் வேகத்திலேயே சென்று காரை தட்டி பிச்சை கேட்டு கொண்டிருந்தான். எங்காவது கொஞ்சம் பிசகினாலும் ஆபத்து. இப்படி அந்த இடத்தை கடக்கும் ஒவ்வொரு காராக பிடித்து கைகள் ஏந்திகொண்டிருந்தான். காரில் போகிறவர்கள் பணமாக போடுவார்கள் என்று நினைத்து கொண்டான் போல...


என் உடன் இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், கத்தினார்...


" டே, அறிவில்லையா உனக்கு ? காரை புடிச்சிக்கின்னு போறே...?
" அவனிடமிருந்து வந்த பதில்.. "போயா யோவ்..".


கடத்தியவர் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார், அவருடன்  "அது"வான "நானும்".




ஏன் இவர்கள் இப்படி ?
ஏன் "நான்" இப்படி ?
.....
"நான்" என்பது இங்கு "நான்" மட்டுமில்லை...

Saturday, June 12, 2010

பப்புவின் அட்ராசிட்டி - 4




------------------------------------------------------------------------------------

அப்பா : டேய், ஏன்டா அழுவுற...?
பப்பு : அம்மா அடிச்சுட்டாங்க..உம்ம்ம்....உம்ம்ம்...
அப்பா : இதுக்கு எல்லாமா அழுவாங்க ?
பப்பு : யோவ்..போயா..உன்ன மாதிரியெல்லாம் என்னால அடி தாங்க முடியாது...!!!

------------------------------------------------------------------------------------

பப்பு : தாஜ் மகாலுக்கு பச்சை கலர் பெய்ண்ட்டு அடிச்சா என்ன ஆகும்....?
அப்பா : தெரியலையே...
பப்பு : கொஞ்சம் செலவாகும்.

------------------------------------------------------------------------------------

பப்புவின் தத்துவம் - 1045

காதலிக்கிற பொண்ண காதலின்னு சொல்லலாம்...
கல்யாணம் பண்ண போற பொண்ண கல்யாணி-ன்னு சொல்ல முடியுமா...?
யோசிங்க...யோசிங்க...

------------------------------------------------------------------------------------

பப்பு (தன் குட்டி தோழியிடம்...) - நீதான் எனக்கு WIFE-ஆ வருவேன்னு என்னோட க்ளாஸ் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு...!!!

தோழி : எப்படி சொல்ற ?

பப்பு : நேத்து கிளாஸ்ல சொன்னாரு, பன்னி மேக்கதான் நீ லாயக்குன்னு..!!!

------------------------------------------------------------------------------------

ப்ளாஷ் நியூஸ் :

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி...

பப்பு : மக்களே எல்லாரும் அவர் சீக்கிரம் குணமாகனும்னு வேண்டிக்கங்க,
ஏன்னா..அவர்கிட்ட இன்னும் நாலு சி.டி இருக்காம்.

------------------------------------------------------------------------------------

டீச்சர் : பசங்களா, நீங்க எல்லாரும் நல்லா படிச்சு நம்ம நாட்டுக்கு நல்ல பேரு வாங்கி தரணும்.

பப்பு : ஏன் இந்தியா-ங்கிற பேரு நல்லாதான இருக்கு ???

------------------------------------------------------------------------------------

பப்பு : அம்மா, என்னோட ப்ரெண்டு வர்றான், சீக்கிரம் இந்த காஸ்ட்லி ஐட்டம்ஸ் எல்லாத்தையும் உள்ள கொண்டு போய் வைங்க...!!!

அம்மா : ஏன்டா, உன் ப்ரெண்டு ரொம்ப திருடுவானா ?

பப்பு : அதில்லமா, இதையெல்லாம் பார்த்தான்னா அவனோடதுன்னு கண்டு பிடிச்சுடுவான்...

------------------------------------------------------------------------------------

பரீட்சை எழுதியவுடன்...

பப்பு : டே நான் ஒண்ணுமே எழுதல...

பப்பு ப்ரெண்டு : நானும் தாண்ட..

இன்னொரு ப்ரெண்டு : டே நானும் தாண்ட ஒண்ணுமே எழுதலை...

பப்பு : அடப்பாவி நாய்களா...போச்சு போ, நாம எல்லாரும் ஒன்னா காப்பி அடிச்சோம்னு மிஸ் கொல்ல போறாங்க...!!!

------------------------------------------------------------------------------------

டீச்சர் : ஒரு பெண் வண்டி ஒட்டிக்கொண்டு போகிறாள்..., பப்பு இத அப்படியே இங்கிலீஷ்ல சொல்லு...

பப்பு : PEN DRIVE

------------------------------------------------------------------------------------

எல்.கே.ஜி வகுப்பில்....

டீச்சர் : இங்க யாருக்கெல்லாம் NUMBERS தெரியும்..
பப்பு மட்டும் கை தூக்குகிறான்..

டீச்சர் : வெரி குட்.
சொல்லு, நாலுக்கு அப்புறம் என்ன வரும்.

பப்பு : ( கை விட்டு எண்ணிக்கொண்டு ) அஞ்சு.

டீச்சர் : வெரி குட்..ஏழுக்கு அப்புறம் என்ன வரும்..?

பப்பு : ( மீண்டும் கை விட்டு எண்ணிக்கொண்டு ) எட்டு.

டீச்சர்: வெரி குட்.உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க..

பப்பு : என்னோட அப்பா மிஸ்.

டீச்சர் : ரொம்ப நல்ல அப்பா....சரி, பத்துக்கு அப்புறம் என்ன வரும் சொல்லு...?

பப்பு : கொஞ்சமும் யோசிக்காமல், JACK மிஸ்.


------------------------------------------------------------------------------------

பப்பு : ஏண்டா உங்க அப்பாவுக்கு, ஆக்ஸிடன்ட் ஆன விஷயத்தை என்கிட்ட சொல்லலை...?

ப்ரெண்டு : சாரிடா பப்பு, சொல்ல மறந்துட்டேன்...

பப்பு : போடா துரோகி, எங்கப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆனா , உன்கிட்ட சொல்றனா பாரு...

------------------------------------------------------------------------------------

கிராமத்தில் பப்பு :

அந்த கிராமத்துக்கு அன்னைக்கு கலெக்டர் வந்திருந்தார்...

கலெக்டர் எல்லார்கிட்டயும் குறைகளை கேக்கும்போது, நம்ம பப்பு வேக வேகமா கலெக்டர் கொட்ட போனான்...
(பல தமிழ் சினிமாக்களில் வருவது போல...)

பப்பு (சத்தமாக) : கலெக்டர் சார்ர்ர் , மொதல்ல எங்க ஊருக்கு ஒரு பாலம் கொண்டு வாங்க...

கலெக்டர் ( தலையை சொரிந்துவிட்டு) : இந்த ஊருலதான் ஆறே இல்லையேப்பா, அப்புறம் எதுக்கு பாலம்..

இப்ப பப்பு தலையை சொரிந்துகொண்டே.. : அப்படின்னா, மொதல்ல ஒரு ஆற கொண்டு வாங்க...!!!! (எப்பூடீ...)

கலெக்டர் : ???

------------------------------------------------------------------------------------

இது போனஸ் ஜோக் ..என்ஜாய்.......


கணவன் : இன்னைக்கு நைட் என்ன டின்னர் டார்லிங் ?

மனைவி : (வெறுப்புடன் ) ம்ம்....விஷம்..

கணவன் : ஒ.கே எனக்காக வெய்ட் பண்ணவேண்டாம், நீ சாப்பிட்டு தூங்கு... :)

------------------------------------------------------------------------------------

இது பப்புவின் பழைய காமெடி...இருந்தாலும் ரிப்பீட்டு....

தாத்தா : டே பப்பு, உங்க மிஸ் வர்றாங்க...ஓடி போய் ஒளிஞ்சுக்கோ....

பப்பு : அய்யோ தாத்தா..நீ போய் ஒளிஞ்சுக்கோ....நீ செத்துட்டேன்னு சொல்லித்தான் ஒரு வாரமா லீவு போட்டு வீட்டுல இருக்கேன்...

------------------------------------------------------------------------------------

அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்......
- ஜொள்ளன் பப்பு.

Wednesday, June 9, 2010

பூண்டாக் செயின்ட்ஸ் - Boon Dock Saints (1999)


இந்த படத்தை பார்த்த உடன் தோன்றியது, க்வெண்டின் டராண்டினோ இந்த படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பார் என்றுதான், ஏன்னா படம் கிட்டத்தட்ட அவர் ஸ்டெயிலில் தான் இருந்தது.. (உடனே க்வெண்டின் ரசிகர்கள் சின்ன சின்ன பசங்களோட எல்லாம் க்வேன்டினை கம்பேர் பண்ணுவதா ?, என்றெல்லாம் சண்டைக்கு வரக்கூடாது...)






1999-இல் TROY DUFFY-ங்கிற டைரக்டர் இயக்கி வெளி வந்த ஆக்ஷன் க்ரைம் திரைப்படம்தான் இந்த பூண்டாக் செயின்ட்ஸ்.
படத்தோட ஒன் லைன் ஸ்டோரி ரொம்ப சிம்பிள் மச்சான்ஸ், தாங்கள் கெட்டவர்கள் என நினைக்கும் அனைவரையும்
கொல்ல முற்படும் இரு சகோதரர்கள். ரொம்ப ஸ்டைலிஷான ஒரு ஆக்ஷன் த்ரில்லர். இந்த படம் திரையில் வெளியிட்ட போது, தோல்வி அடைந்து பின்னர் டி.வி.டி.யில் சக்கை போடு போட்ட படம். CULT FILM என சொல்லப்படும் ஒரு சாராருக்கு மட்டுமே பிடித்ததாக இந்த படம் அமைந்துவிட்டது.

கான்னோர், மார்பி ஐரிஷ் நாட்டை சேர்ந்த கத்தோலிக சகோதரர்கள்.வாரா வாரம் சண்டே ஸ்கூல் எனப்படும் கிருத்தவ மத போதனைகளுக்கு தவறாமல் செல்பவர்கள். அவ்வளவு நல்ல பசங்க. ஒரு நாள் நண்பர்களுடன் புனித.பாட்ரிக்(ST.PATRICK) தினத்தை பாரில் கொண்டாடி கொண்டிருக்கும்போது, ஊருக்குள் புதிதாக ரவுடியிசம் செய்ய வந்திருக்கும் ரஷ்ய மாபியா கும்பலால் தாக்கப்படுகின்றனர் சகோதரர்களும் அவருடைய நண்பர்களும். அந்த மாபியா கும்பலில் வெறும் மூனே மூணு தடி தாண்டவராயன் மட்டும் தான் என்பதால் சகோதரர்களும், 
அவர்களுடைய  நண்பர்களும் ரஷ்ய கும்பலை தாக்க ஆரம்பிக்கின்றனர்.


[கட்]



மறுநாள், ஒரு குப்பை தொட்டி அருகில் மூன்று சடலங்கள் கிடக்க, நம்ம ஸ்பைடர் மேன் வில்லன் வில்லம் DAFOE (தமிழ்ல எப்படி அடிக்குறதுன்னு தெரியலப்பா....அட்ஜீஸ் பண்ணிக்கோங்க :) ) இந்த கொலைகளை விசாரிக்க வருகிறார்.சடலங்களையும், இடத்தையும் ஆராயும் வில்லம், இது தற்காப்புக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்று முடிவுக்கு வருகிறார்.

அன்றே சிறிது நேரத்திற்க்கெல்லாம், சகோதரர்கள் காவல் நிலையத்திற்க்கு சென்று உண்மையை ஒப்பு கொள்கின்றனர். அப்படியே கொசுவத்தி சுருள் வச்சு ப்ளாஷ் பேக்கில் என்ன நடந்தது என்பதும் காண்பிக்கப்படுகிறது. பாரில் நடந்த சண்டைக்காக மீண்டும் பலி வாங்க வரும் ரஷிய தடியன்களை சகோதரர்கள் போட்டு தள்ளும் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. ரஷ்ய மாபியா கும்பலை சேர்ந்த மூன்று பேரை இவர்கள் கொன்றிருப்பதால், போலீஸ் இவர்களை ஹீரோக்களாக பாவிக்கிறது.




அதனால் அன்றே விடுதலை செய்யப்படும் சகோதரர்கள், வெளியில் இருக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கு தெரியாமல் செல்ல வேண்டும் என்று அன்று இரவு மட்டும் லாக்கப்பில் கழிக்கின்றனர். அங்கதான் ஒரு ட்விஸ்ட்டு. இருவர் கனவிலும் வரும் ஏதோ ஒரு சக்தி அவர்களை தீமைக்கு எதிராக தூண்டிகிறது(?).

இங்கதான் ராக்கோ, அப்படிங்கிற நண்பர் (செம இன்டரஸ்டிங்கான கேரக்டர் மச்சான்ஸ்) சகோதர்களோட கூட்டு சேருகிறார். ராக்கோவுக்கு ஊருக்குள் இருக்கும் ரவுடி, கேப்மாரி, சோமாறி, பிஸ்தா, பேட்டை பக்கிரி, மாபியா பாஸ், முடிச்சவிக்கி, கஞ்சா குடிக்கி என எல்லோரின் ஜாதகமும் அத்துபடி. எனவே சகோதர்களின் இந்த தீமைக்கு எதிரான போரில் அவரும் சேர்ந்து கொள்கிறார்.



இங்கதான் படம் டாப் கியர் போட்டு ஆரம்பிக்குது.
மூன்று பேரும் ஊருக்குள் இருக்கும் ஒவ்வொரு
பெரிய தலையாக ப்ளான் போட்டு அனாசயமாக போட்டு தள்ளுகின்றனர்.

எடிட்டிங்கிலும், திரைக்கதையிலும் ரவுசு கட்டி ஆடியிருக்காங்க.
உதாரணத்துக்கு ஒரு காட்சி இப்படிதான் நகரும்.
ராக்கோ, யாராவது ஒரு
பெரும் புள்ளியை பற்றி பேசுவான். [கட்]
அடுத்த காட்சி, வில்லம்-க்கு கொலை நடந்ததாக போன் வரும். [கட்]
சம்பவ இடத்துக்கு விரையும் (?) வில்லம், அங்கிருக்கும் ஒவ்வொரு ஆதாரத்தையும் வைத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க, [கட்]
திரையில் அந்த காட்சிகள் காட்டப்படும். NON LINEAR EDITING DONE WITH A CLASSIC TOUCH.





இப்படி யாருக்கும் தெரியாமல் சகோதரர்கள் மர்ம தேசம் கருப்பு சாமி போல எல்லாரையும் போட்டு தள்ள, போலீசும் மாபியா கும்பல்களும் இவர்களை நாலா பக்கமும் தேடுகின்றனர். வேறு வழியே இல்லாமல் மாபியா கும்பல் தலைவன் ஒருவன் இவர்களை போட்டுத்தள்ள பல வருடங்களாக சிறையில் இருக்கும் ட்யூஸ்[DUCE] என்ற ஒரு கொடூர கொலைகாரனை(?) வெளியே கொண்டு வருகிறான். ட்யூசும், நம்ம சகோதரர்களும் மோதும் நேரடி காட்சிகள் பர பர பட்டாசு...

அதற்க்கப்புறம் வரும் ஒரு கடைசி ட்விஸ்ட்டு, ஒரு துப்பாக்கி சண்டை என படத்துக்கு சுபம் போடுகின்றனர். WILLAM DAFOE சில காட்சிகளில் மொக்கை போட்டாலும் பல காட்சிகளில் மனுஷன் நடிப்பில் கலக்கிவிடுகிறார்.

மொத்தத்தில் பூன்டாக் செயன்ட்ஸ் ஒரு அட்டகாசமான ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் மச்சான்ஸ்.
பார்த்துட்டு சொல்லுங்க மச்சான்ஸ்.


Friday, June 4, 2010

ஒரு மூட்டை புண்ணியம்.

அன்பு மச்சான்ஸ்...

ஒரு நல்ல விஷயத்துக்காக இந்த பதிவு...

ஆனால் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு மட்டும்... மற்ற மச்சான்ஸ், உங்களுக்கு சென்னையில் நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் யாராவது இருந்தால் இந்த தகவலை தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்...




ஸ்வர்க் - இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.
(உடனே போயிடாதீங்க...என்னவென்று முழுதாக படித்துவிட்டு செல்லவும்...)

பல்வேறு துறைகளில் வேலை செய்யும் இளைஞர்ஸ் & இளைங்கிஸ் சேர்ந்து, வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்படும் ஒரு தொண்டு நிறுவனம் தான் இந்த ஸ்வர்க்..

விஷயம் இதுதான் மச்சான்ஸ்...ரொம்ப சிம்பிள்.

வரும் ஞாயிற்று கிழமை, இந்த நிறுவனத்தை சார்ந்த நண்பர்கள், புத்தகங்களை சேமிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த விருக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் மச்சான்ஸ் , உங்களிடம் உபயோகப்படுத்திய, பழைய பாட புத்தகங்கள் இருந்தால் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள நண்பர்களிடம் தகவல் தெரிவியுங்கள்.கல்லூரி, உயர்நிலை, இடைநிலை, தொடக்க கல்வி  எந்த புத்தகமாய் இருந்தாலும் தெரிய படுத்தவும்.

அவர்கள் உங்கள் வீடு தேடி வந்து அந்த புத்தகங்களை பெற்று கொள்வர்.
வசதி வாய்ப்பில்லாத பல நூறு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உங்களின் புத்தகங்கள் சென்றடையும். இந்த நல்ல விஷயத்தை செய்ததற்கு கண்டிப்பாய் உங்களுக்கு ஒரு மூட்டை நிறைய புண்ணியம், அதைவிட ஒருவருக்கு உதவினோம் என்ற மனத் திருப்தி கண்டிப்பாய் உங்கள் மனதை நிறைய செய்யும் மச்சான்ஸ்.

இதுவரை மச்சான்ஸில் ஒட்டு போட சொல்லி நாங்கள் கேட்டதில்லை, இந்த தடவை - இந்த விஷயம் நிறைய பேரை சென்றடைய உதவுங்கள் மச்சான்ஸ். அட்வான்ஸ் தாங்க்ஸ்பா..

உங்கள் வீட்டு முகவரியை மெயில் அனுப்பவோ, இல்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ளவோ....


Mail :    theswarg@gmail.com
Or call  Mr.Thomas @ 9840595557
           Mr. Ragavendra @ 9884744672


ஏதோ நம்மளால முடிந்த ஒரு நல்ல விஷயம், ஒரு ஒரு மெய்லோ அல்லது போன் கால்தான்..யோசிக்காமல் செய்யவும் மச்சான்ஸ்.
ஸ்வர்க் பற்றி மேலும் தெரிந்துகொள்ள....

Swarg Team.
SWARG Website:- http://theswarg.org
SWARG Blog:- http://theswarg.blogspot.com/
SWARG Photos:- http://picasaweb.google.co.in/theSwarg
SWARG SMS Channel:- http://labs.google.co.in/smschannels/subscribe/theSwarg

                                     - 
நன்றி மச்சான்ஸ்.

Wednesday, May 5, 2010

தமிழின் டாப் 5 பேய் படங்கள்.


தமிழில் வெளியான சிறந்த (திகிலூட்டிய, அடிவயிற்றை கலங்கடித்த, பயமுறுத்திய, கால்சட்டையை ஈரமாக்கிய ) ஐந்து பேய் படங்களை வரிசைப்படுத்ததான் இந்த பதிவு.



இப்படி ஒரு பதிவு எழுதலாம்னு தேட ஆரம்பிச்ச பிறகுதான் நம்ம மர-மண்டைக்கு ஒரு உண்மை எட்டியது. தமிழ்ல வந்த நல்ல பேய் படங்களின் மொத்த எண்ணிக்கையே ஒரு பத்துதான் என்று. திரில்லர் படங்களை இந்த ஆட்டத்துக்கு நாங்க சேர்த்துக்கலை. ஒன் அண்ட் ஒன்லி பிசாசு படங்கள்.  :)

டாப் - 5 படங்களை பார்க்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட தவறவிட்ட மத்த படங்களை பார்ப்போம்.

ஷாக் - பிரசாந்த், மீனா நடிப்பில் வெளி வந்த படம், பூட்(BHOOT) என்ற ஹிந்தி படத்தின் ஈயடிச்சான் காப்பி. சில காட்சிகள் லைட்டா (??) பயமுறுத்தினாலும், மொத்தமா பார்க்கும்போது படம் கொஞ்சம் சுமார் தான்.

ஷாக் - கரண்ட் கட்.


அது - நம்ம ஹோம்லி நாயகி சினேகா நடித்து -வெளிவந்த திரைப்படம். (இப்படியெல்லாம் படம் வந்ததான்னு கேக்கப்புடாது). இதுவும் தி ஐ(THE EYE) என்ற திரைப்படத்தின் தழுவல் (இங்க பேய் படங்களுக்கு ஐடியா பஞ்சமோ?).



சிவி - இந்த படத்தில் பயமுறுத்தும் பேய் காட்சிகள் ரொம்ப கிடையாது, ஆனா பேய் பழி வாங்கும் கதை. இந்த படமும் ஷட்டர் என்கிற திரைப்படத்தின் தழுவல்.


நெஞ்சம் மறப்பதில்லை - கொஞ்சம், இல்ல இல்ல ரொம்ப பழைய படம். ப்ளாக் அண்ட் வொய்ட் பிலிம். பேய், ஆவி, பூர்வ ஜென்மம் என்று கலந்தடித்து பார்ப்பவர்களின் இதயத்தை

கலங்கடித்த திகில் திரைப்படம். கொடூர ஒப்பனை கிடையாது, பயமுறுத்தும் அசிங்கமான பேய்கள் கிடையாது, இருந்தாலும் அந்த ஜாமீன் பங்களாவை  காட்டும் ஒவ்வொரு

நிமிடமும் திக் திக் பகீர் பகீர். நம்பியார் ஒரு பாதியில் பேசி மிரட்டுவார், இன்னொரு பாதியில் பேசாமலேயே மிரட்டி இருப்பார்.

இந்த சூப்பர் படத்தை நம்ம லிஸ்ட்டுல சேர்ப்பதா இல்லையா என்று ஒரு குழப்பம்...அதனால இந்த படத்துக்கு சிறப்பு பரிசு (நம்ம வாழ்நாள் சாதனையாளர் விருது மாதிரி) – SPECIAL MENTION.

இந்த படங்களை தவிர்த்து வா அருகில் வா, அந்தி வரும் நேரம், அமாவாசை இரவு, ராசாத்தி (சம்திங்), யார் (இந்த படம் நல்லா இருக்கும் , அனால் சாமிக்கும் பேய்க்கும் சண்டை என்பதுபோல் தடம் maarividum, மற்றபடி இதுவும் ஒரு சூப்பர் படம்)...etc போன்ற நல்ல பேய் படங்களும் உண்டு, என்ன டாப் ஐந்தில் இடம் பெறவில்லை.

இனி நம்ம டாப் -5 படங்கள்.



இந்த படங்களுக்கு எல்லாம் அறிமுகமே தேவை இல்லை. இருந்தாலும் ஆங்காங்கே சில கொசுறு செய்திகள் .

இந்த படங்களை எல்லாம் வரிசைப் படுத்தவில்லை மச்சான்ஸ், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் வெளிவந்து கலக்கிய (வயிற்றைத்தான்) திரைப்படங்கள்.

யாவரும் நலம்(2009).




ஒரே நேரத்தில் ஹிந்தி (13B), தமிழ் என்று இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற திரைப்படம். பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். மனுஷன் மிக்ஸிக்குள்ள  எல்லாம் கேமாராவ வச்சு எடுத்திருப்பார்.
இன்னொரு விஷயம், நெக்ஸ்ட் பார்ட் எடுக்க பிளான் பண்ணிட்டு இருக்காங்கலாம்.

டைரக்டர் விக்ரம் குமார் இயக்கம்.வழக்கமான பேய்  படங்கள் போல் அல்லாமல் கடைசி வரை மர்மத்தின் முடிச்சை அவிழ்க்காமல் காட்சிகளை வைத்தே பயமுறுத்திய படம். அதனாலநம்ம லிஸ்ட்டுல இந்த படத்துக்கு ஒரு இடம்.ஷங்கர் எஹ்சான் லாய்-இன் பின்னணி இசை,பக்கபலம்.

பதிமூனாம் நம்பர் வீடு(1990).



டைரக்டர் : பேபி
நடிகர்கள் : நிழல்கள் ரவி, ஜெய்ஷங்கர், ஸ்ரீப்ரியா,

இந்த படத்த நான் நாலாவது படிக்கும்போது பார்த்ததா ஞாபகம். ரொம்ப கஷ்டப்பட்டு ஒளிஞ்சிக்குட்டே பார்த்தேன் (அவமானம்). படம் நார்மலா போயிட்டு இருக்கும் திடீர் திடீர்னு ஒரு அதி பயங்கரமான பேய் முகத்த காண்பிச்சு டரியல் ஆக்கிடுவாங்க. ஆரம்பத்தில ஒரு பெய்ண்டிங் சீன் வருமே அது சீனு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த படத்த பார்க்கும்போது நாங்க தங்கியிருந்த வீட்டோட நம்பரும் பதிமூனுதான்.


மை டியர் லிசா. (1987)








டைரக்டர் : பேபி
இசை : கங்கை அமரன்.
நடிகர்கள் : நிழல்கள் ரவி, சாதனா.
ஒளிப்பதிவு : நிவாஸ்.

இந்த படத்திற்கும் அறிமுகமே தேவை இல்லை, பார்த்தவங்கள் கேளுங்க, பயந்த கதையை பக்கம் பக்கமா சொல்வாங்க.


ஜென்ம நட்சத்திரம் (1980s).


நடிகர்கள் : பிரமோத், சிந்துஜா, நாசர்.
டைரக்டர் : தக்காளி ஸ்ரீனிவாசன்.


ஆங்கிலத்தில் வந்த ஓமன் படத்தின் தமிழாக்கம், இங்கயும் சும்மா மெரட்டி இருப்பாங்க.  அதுவும் அந்த ஆயா ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும், எதுக்கு கீழயோ சூன்யம் வச்சா மாதிரியே இருக்கும். அந்த குட்டி பையனும் செம டெரரு. ம்யூசிக்கும் பயங்கரமாஇருக்கும்.


உருவம் (1991)


டைரக்டர் : ஜி.எம்.குமார்.
நடிகர்கள் : மோகன், விஸ்வம், பல்லவி.

இதுதான் மச்சான்ஸ் தரவரிசையில் டாப் ரேட்டட் படம். கடைசியில் மோகன் வரும் காட்சிகள் எல்லாம் செம க்ரிப்பிங். மோகன் சொந்த குரலில் பேசிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று. கடற்கரையில் பட்ட பகலில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட மிரட்டியிருக்கும். இது கண்டிப்பா பார்க்கவேண்டிய படம். நாலஞ்சு பேர துணைக்கு வச்சுக்கிட்டு இந்த படங்களை எல்லாம் பாருங்க மச்சான்ஸ்.

----------------------------------------------------------------------------------------
எங்க ஜகன்மோகினி படத்த லிஸ்ட்டுல காணும்னு கேக்குற மச்சான்ஸ் எல்லாருக்கும், மச்சான்ஸ் விமர்சன குழு சார்பாக ஒரு சுறா பட டிக்கட் பரிசு.
----------------------------------------------------------------------------------------

கொஞ்ச நாள் முன்னாடி போடப்பட்ட டாப்-5 போலீஸ் படங்களின் லிங்க் இங்கே.

                     - இப்படிக்கு மச்சான்ஸ் விமர்சன குழு
                                       (விகடன் விமர்சன குழுவின் கஸின் பிரதர்ஸ்.)


Wednesday, April 28, 2010

"பொய்"யெனப் பெய்யும் மழை !!

மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு ...
ரொம்ப நேரம் மழை பெய்த பிறகு, தட் தட் னு எங்கயாவது மிச்சமா இருக்கிற தண்ணி சொட்டி கிட்டு இருக்கும்.. அந்த மாதிரி இருக்கிற சில நினைவுகள் இங்க தெளிக்கப்படுகிறது  ...

அவளுக்கு இன்னும் நாலு நாள், இல்ல இன்னும் சரியா 93 மணி நேரத்துல சுப முகுர்த்தம்! 
என்னடா கிளைமாக்ஸ் சொல்லிட்டு கதை ஸ்டார்ட் பண்றான்..?? இரு, மச்சி ட்விஸ்ட் எங்க வேணும்னாலும் இருக்கலாம். 

ஸ்டார்ட் ..கேமரா ..1..2..3..
சின்ன வயசில கணக்கு நல்லா படிப்பேன், வளர வளர ரொம்ப சுமார் ரகம் தான் . சக மாணவர்கள் எல்லோரும் maths tuition போய் தீவிரமா படிச்சிட்ருந்தாங்க ..அப்படி ஒருத்தன் தான் ராகவன்  ..நம்ம நெருங்கின தோஸ்து ! இந்த கதைல ரொம்ப முக்கியமான கேரக்டரு. பதினோராம் வகுப்பு, ஒரு சாயங்காலம் , நான், தமிழரசன்ராகவன்  எல்லாம் மொக்கை போட்டுட்டு இருந்தோம். அப்போ ராகவன் , "மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணு வீட்டுக்கு போறேன் , மேக்ஸ் நோட்டு வாங்க, நீங்க ரெண்டு பெரும் வாங்கடா  என்னோட ". நான் , " மச்சி என்னடா சொல்ற ?!? LKG லேர்ந்து பாய்ஸ் ஸ்கூல் தானடா இருக்கோம் ..எப்படா பிகரு பழக்கம் வந்துச்சி ?",  ராகவன் , "அதான் சொன்னேன்ல  மச்சி, கிளாஸ் டீச்சர்  கிட்ட tuition போறேன், அங்க தெரியும், Cluny பொண்ணு மச்சி , செம கட்டை ".
தமிழரசன், "மாமா  scenu டா , என்னடா சொல்றே, நெசமா அவ வீட்டுக்கு போறியா? " ராகவன், " டேய் முட்டை ,நானும் இது வரைக்கும் பிகரு வீட்டுக்கு போனதில்லை , அதான் வாங்கடா , மூணு பேரும் போவலாம் .." , நான் அபசகுனமாய் ." டேய் விளையாடாதடா, நாங்க வரலை , நீ வேணும் நா போயிட்டு வா ..
என் வாழ்க்கையோட மிக முக்கியமான தருணம் அது ! ஆனா சின்ன வயசிலேர்ந்து பொண்ணுங்க கூட பேசாமலே வளர்ந்துட்ட எனக்கு , அப்போ, போக வேணாம் , என்ற எண்ணமே அதிகமா இருந்துச்சி ..
ஒரு வழியா மூணு பேரும், போய் அவளைப் பார்த்தோம்..நல்லா இருந்தா ! அப்புறம் தமிழரசன்  , அவசர வேலைனு கிளம்பி போய்ட்டான். நாங்களும் கிளம்பினோம், ராகவன் பைக் ஸ்டார்ட் பண்றப்போ , அவ வந்து , நீ இனியா  வீட்டுக்கு போகலை ? என்றாள். நாங்க முழிச்சோம். அவ பக்கத்துக்கு  வீடு தான் என்று கை காட்டினாள்.   "அப்படியா ? அவ tuition ல சொன்னதே இல்ல..", சரி நான் பார்த்துட்டு போறேன் என்றான். 
நான், அவனை பார்த்து , மாப்ளே நீ பெரிய ஆளு தான், ஒத்துகிறேன் ...
ஆனா நேரமாச்சு மழை வேற வர்ற மாதிரி இருக்கு ,இந்த நேரத்துல இன்னொரு பொண்ணு வீட்டுக்கு போறது சரில்லை, வா கிளம்பலாம், என்றேன். அவன் மச்சான் , 5 நிமிஷம் , "Hi" சொல்லிட்டு உடனே கிளம்பிடலாம்.  
அவளைப்பார்த்த முதல் நாள் :   
இரவு 8.30; அக்டோபர் ,2002 ; அவள் வீட்டுச்சந்து;  
நான் அவ  வீடு எதிரில் பைக்கிட்ட நின்னுட்டு இருந்தேன். முதல் தடவை, வீட்டுக்கு பையன் ,அதுவும் ராத்திரி நேரம் வந்திருக்கான். சற்றே பதற்றமாய் இருந்த இனியாவிடம்  , வீட்டு வாசலில் நின்று ராகவன் பேசிக் 
கிட்டு இருந்தான்.அவங்க குடும்பமே பக்கத்துல நின்னுகிட்டு இருந்துச்சி. அப்போ தான் அவளைப்பார்த்தேன், சட்டென நெஞ்சு வலி ..இல்ல அட ஏதோ சொல்லுவாங்களே ..ஆங் இதயத்துல ஏதோ நெருடல்..நெஞ்சுல கை வச்சேன்,சட்டை ஈரமா இருந்துச்சி ..கடவுளே! அவ்ளோ வழிஞ்சிட்டேனா ?!? அடடா மழை ..! ( உடனே பையா சாங் வேணாம், சின்ன கிறுக்கல் போதும்)
 " நான் உன்னை 
முதன்முதலாய் 
பார்த்த 
மழைக்கோர்த்த
அந்த இரவு! 
என்னுள் இன்னும் விடியவே இல்லை ..

என் 
உயிர் நண்பனுடன் 
நீ பேசிக்கொண்டிருந்தாய் ..
ஓரமாய் 
உன்னை ரசித்தபடியே 
நான்! 
அன்று முதல் அவன்
'நண்பன்' ஆகிவிட்டான்..
உயிர் 
நீயாகி விட்டாய் !"

கடைசி சந்திப்பு :
********************
இரவு 8.30; டிசம்பர், 2009; வித்யா வீடு;

"என்ன வித்யா , அவ எப்போ வருவா ?"
நீ வந்து 10 நிமிஷம் தான் ஆச்சு, 7 தடவை கேட்டுட்டே; அப்போ நீ என்னைப் பார்க்க வரலை ? 
ஹ ஹ ஆஹா ..சரி பீல் பண்ணாத விடு , நண்பன் பார்த்திபன் என்னை பார்க்க பெங்களூர் லேர்ந்து வந்திருக்கான், அவனை பீச்ல விட்டுட்டு வந்திருக்கேன் ..எதுக்காக ? உனக்காகவும் , இனியாவுக்கும்  தான்..

படிக்கட்டில் அவள் பேச்சு சத்தம், காதில் தேனாகப் பாய்ந்தது. 
வந்துட்டா  , உன் ஆளு ,என்று நக்கல் சிரிப்புடன் எழுந்தாள் வித்யா 

"ஹாய்", என்று அகன்ற சிரிப்புடன், தாவிச்சென்று கட்டி கொண்டாள், என்னை இல்ல , வித்யாவின் அண்ணி குழந்தையை!
அதனைக் கொஞ்சியபடியே வந்து , எப்படி இருக்கே ? என்று கண் சிமிட்டினாள். 
இடையே வித்யா , குழந்தையிடம் , இனியாவை காமித்து , "அக்கா சொல்லு , அக்கா சொல்லு" என்றாள்..அதுவும் மழலையாய் தடுமாறி , "அழ்கா" எனச்சிரித்தது.
நான், அதன் சிறு விரல்களைப்பிடித்து , என்னை காண்பித்து "மாமா சொல்லு , மாமா சொல்லு " என்றேன்..படு சுலபமாய் சொல்லி குதூகலித்தது! 

அவள் முறைத்தாள்! செல்லமா ? கோபமா ? அது தெரிய இன்னும் எட்டு வருஷம் பழகணும். 
செல்லமாய் முடியை கலைத்து, போடா என்றாள், (அப்டியே ஓபன் பண்ணா சுவிஸ் ல டூயட் !) 
"நீ 
நான் 
காதல்
இவற்றை ச் சுற்றியே 
சுழல்கிறது 
என் உலகம் ! "

இடைப்பட்ட எட்டு வருடங்கள் :
************************************
இடம் : சென்னை;கேரளா;புதுவை;பெங்களூர்;ஐரோப்பா;

1) முதல் சந்திப்பு - அடுத்த நாளே கணித வகுப்பு சேர்தல்! 
" அன்று கணித வகுப்பு 
புரிந்தும் புரியாதது 
போல் நடிக்கிறேன் 
உன்னிடம் ..
நீ கற்று கொடுத்த கணிதம் 
மூளையில் ஏறவில்லை..
நீ கற்று கொடுக்காமலே 
காதல் இதயத்தில் 
ஏறி விட்டது !"
2) காதல் தெரிவித்தல் - அவள் மறுத்தல் 
3) சோகம் - வகுப்பு செல்லா நோன்பு! 
4)  பனிரெண்டாம் பொதுத்தேர்வு - பொறி கலங்குதல் ;
" என் தமிழச்சியே !
கணித வகுப்பில் 
ஆங்கிலம் பேசி 
தாவரவியல் தேவதையாய்,
எனக்குள் 
வேதியல் மாற்றம் செய்து 
என் இதய பூகோளத்தில் 
உன் காதல் வரலாறு செதுக்கி,
இப்போது ,என்னை 
அறிவியல் அறியாத 
விலங்கியல் உயிரினமாய்  
உருமாற்றி விட்டாயே ..? " 
5)கல்லூரி : நான் பொறியியல் ; அவள் ஆங்கில இலக்கியம்;
6) நட்பும் , நட்பு சார்ந்த காலம். உபயம் : திரு . நோக்கியா 
7) அட ! அவள் காதல் தெரிவித்தல் - நான் வழிதல்.

மூன்று வார்த்தைகளைச் 
சொல்ல மூன்றரை வருடம் 
ஹ்ம்ம் ...
"காத்திருத்தல் " என்பதன் 
சுருக்கம் தான் 
"காதல்"
ஆனதோ ?
8) லட்சக்கணக்கான வார்த்தை ப்பரிமாற்றங்கள் - நன்றி ! குறுஞ்செய்திகளும் , குறைவான தொலைதூர அழைப்பு கட்டணங்களும்.
புது நண்பர்கள் :(
9) பணிச் சேர்தல் - அவள் மருத்துவமனை ; நான் கணிப்பொறி குப்பை கொட்டல் .. ( எவனோ ஒருவன்;அலைபாயுதே  ?? )
10) சந்திப்பு விகிதம் கவலைக்கிடம் - "அவள் பயம் + 1000 km"  இடைவெளியில் இரு மனங்கள்!
" காதலித்து பார்த்து 
கவலைகள் தெரியும் " என்பார் !
ஆனால்  எனக்கு 
காதலியை பார்ப்பதே 
கவலையாக உள்ளது.."
11) சிறு உரசல்கள்... 
12) கவிதை பதிவுப்பக்கம் உருவாக்கல் - பரிசளித்தல் - டம்மில் படிக்க தயக்கம் - ஐடியா தரைமட்டம்;
13) குறுஞ்செய்தி - " உனக்கு என்னை விட சிறந்த பெண் கிடைப்பாள்; எனது ஒரே குறிக்கோள் என் வீட்டாரை நலமுடன் வைத்தல்". 
14)நான்  மனசொடிதல் - அவள் பார்க்க மறுத்தல்; நான் காரணம் தெரியாமல் தவித்தல் 
15) மறுபடியும் நட்புக்காலம் ; உபயம் : திரு. ஜிமெயில்.
16) நான் அயல் நாடு செல்லல்; அவள் அப்படியே.

கடைசி கடுதாசி.. இல்ல லெட்டர்..இல்ல ஈமெயில் :
***********************************************************
மார்ச்; 2010;

"அயல்நாட்டில் நீ நலமாய் இருப்பாய் என்று தெரியும் (?!!?)
எனக்கு திருமணம் ..கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் மாப்பிள்ளை ( நாங்கள்ளும் அதே ஆணிய த்தான்  புடுங்கிட்டு  இருந்தோம்?) 
அப்பாவுக்கு தெரிஞ்ச குடும்பம் ..அப்பாவுக்கு புடிச்சிருக்கு , எனக்கும் தான் ."
 நாள் :மே 2,  இடம் : கேரளா கோவில்."
  இப்படிக்கு 
  இனியா.

ஆங் ....சொல்ல மறந்துட்டேன் ..அவ மலையாளி , அடியேன் சுத்த தமிழன்.

இந்த மெயில் படிக்கும் போது, இங்க வகுப்பில யாரோ ஒரு வயசான இத்தாலி நாட்டு வாத்தியார் கத்திகிட்டு இருந்தார், "சர்வதேச கலாச்சாரம்" பாடம் நடந்து கிட்டு இருந்துச்சி.."யோவ், இன்னும் எங்க நாட்டுலே  இருக்கிற கலாச்சாரமே , எழவு புரியல ..நீ வேற ".. 
கண்ணெல்லாம் கலங்கி, சன்னல் வழியா பார்த்தேன் ..வெளியில சொட்டு சொட்டாய்..அது பேர் என்ன சொல்லுவாங்க..? "மழை " தானே ? 

சரி கதை முடிஞ்சிருச்சி ...
ட்விஸ்ட் ??  இன்னும் 91 மணி நேரம் இருக்கு,   9300 km; நடுவுல 3 பனிமலை, 1 எரிமலை இருக்கு . 
என்ன சொல்றீங்க ?? எனக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா" மேல நம்பிக்கை இருக்கு... :(
 "பொய்"யெனப் பெய்யும் மழை !!! 
டிஸ்கி :
இது என் சொந்த கதை இல்ல ..அப்படினு சொன்னா நம்பவா  போறீங்க..

----இன்னமும் மழைக்காதலன் ..அருண் !                                 












Related Posts Plugin for WordPress, Blogger...