Friday, March 26, 2010

Haute Tension - ஹை டென்ஷன் (2003 பிரான்ஸ்)




இயக்குனர் அலெக்சாண்டர் அஜா (Hills Have Eyes, Mirrors) இயக்கத்தில் 2003-ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளி வந்த த்ரில்லர் படம் - ஹை டென்ஷன்.

Hills Have Eyes, Mirrors ரெண்டு படமுமே நல்லா இருந்ததால அலெக்சாண்டர்
அஜாவோட மற்ற படங்கள் என்னென்னு தேடும் போது P2-வும், ஹை டென்சனும் கிடைத்தது.



முதல் காட்சி : மேரி உடல் முழுவதும் காயத்துடன் ரத்தக் களறியாக யாரோ ஒருவனால் துரத்தப்படுகிறார். இன்னொருபுறம் யாருமில்லாத காட்டு வழியே அந்த சிகப்பு நிற கார் தனியாக பயணித்துக் கொண்டிருக்கிறது. திடீரென்று மேரி அந்த காரின் முன் பாய, காரை ஓட்டுபவர் ஒரு நொடியில் நிலை தடுமாறி வண்டியை ஓரம் கட்டுகிறார். கீழே விழுந்த மேரி, கார் நின்றவுடன் வேகமாய் அருகில் ஓடி வந்து உதவி கேட்க, அதே நேரத்தில் இன்னொரு உருவம் காரின் மறுபக்கம் ரம்பத்துடன் நெருங்குகிறது....(இதுக்கு மேல என்ன நடந்திருக்கும்னு சொல்ல தேவையில்லை...கருமம் டிரைவரோட "போட்டி" மேல கொலைகாரனுக்கு என்ன ஆசையோ...!!!)

எச்சரிக்கை : ஹார்ட் பேஷண்ட்'ஸ் இதுக்கு மேல இந்த படத்த பாக்கபுடாது. படம் நெடுகிலம் ரத்த வாடை.

[கட், கட், கட்]



ஒரு வார இறுதியை கழிப்பதற்க்காக மேரி தன் தோழி அலெக்சின் வீட்டுக்கு செல்கிறார். யாருமே இல்லாத இடத்தில் விளை நிலங்களின் நடுவில் ஒரு தனி வீடாக வீற்றிருக்கிறது அலெக்சின் வீடு. இவர்கள் பின் இரவு நேரத்தில் வீட்டை சென்று அடைய, அலெக்சின் வீட்டில், அலேக்சுடைய அப்பா இவர்களை வாசலில் வரவேற்கிறார். உணவு அருந்தி விட்டு, அலெக்ஸ் மேரிக்கு விருந்தினர் அறையை காண்பித்து விட்டு தன் படுக்கை அறைக்கு சென்று விடுகிறார். [அலெக்ஸ் மம்மி, அலெக்ஸ் தம்பி உறங்கிவிடுவார்கள்]

மேரி  தூக்கம் வராததால் வெளியே சென்று உலாவிவிட்டு (ஒரு தம் போட்டுட்டு வர்றாங்க) படுக்கை அறைக்கு திரும்புகிறார். காதில் வாக்மேன் மாட்டிக்கொண்டு மேரி படுக்கையில் படுத்திருக்க...

[கட், கட், கட்]



அந்த ஏரியா வழியா ஒரு பழைய டிரக் வண்டில வர்ற "சீரியல் கில்லர் சிங்காரம்", இன்னக்கி ராத்திரி வேட்டையாட அலெக்ஸ் வீட்டுக்கு மார்க் வச்சிடுறார்.
நேரா வீட்டுக்கு வந்து கதவை டம்மு டம்முன்னு தட்டுறார் சீ.கி.சிங்காரம்.

எவன்டா அவன் இந்த நேரத்துல-ன்னு அலெக்ஸ் அப்பா மெர்ஸல் ஆகி கதவை தொரக்க.....

கதவை தொறந்த உடனே சீ.கி.சிங்காரம் அலெக்ஸ் அப்பாவை குடல் பகுதியில் கத்தியை குத்த்த்த்த்தி போட்டு தள்ள, சத்தமே இல்லாமல் சாய்ந்து விடுகிறார் அப்பா.
(அதோட விட்டுட்டா சாதா கில்லர் ஆயிடுவாரே, அதனால இவரு அப்பாவை வச்சு ஒன்னு செய்யுறார் பாருங்க...நீங்களே படத்துல பாருங்க).

அதுக்கப்புறம் ஒவ்வொரு ரூமா போய் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு ஸ்டையிலில் போட்டு தள்ளுகிறார்.

பி.கு : அப்பாவை போட்டு தள்ளுவதில் இருந்து நம்ம மேரி எல்லாத்தையும் ஒளிஞ்சு இருந்து பாக்குறா....!!! சீ.கி.சிங்காரம் அந்த அறைக்கு வரும் போது சாமர்த்தியமாக தப்பியும் விடுகிறார்.



அலெக்ஸ் தம்பி சீ.கி.சி-யிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே தோட்டத்துக்குள் ஓட, அந்த சந்து கேப்பில் மேரி, அலெக்சை தேடி செல்கிறார்.

அலெக்சை மட்டும் கொல்லாமல், வீட்டுக்கு போகும் போது பார்சல் கட்டி கொண்டு போகலாம் என சீ.கி.சிங்காரம் பிளான் பண்ணி அவரை வண்டியில் கட்டி வைத்திருக்க, மேரி அவரை விடுவிக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் திடீரென்று சிங்காரம் திரும்பி வந்துவிடுவதால் வண்டிக்குள்ளே மேரியும் மாட்டிக்கொள்கிறார்.

பின் கதவை பூட்டி விட்டு, வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விடுகிறார் சிங்காரம். அலெக்ஸ் மேரி இருவரும் வண்டியின் உள்ளே மாட்டி கொள்கின்றனர்.

[கட், கட், கட்]



இருவரும் தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை.
படத்தின் மொத்த டிவிஸ்ட்டும் நம்ம சீ.கி.சிங்காரம்தான். கலக்கி விடுகிறார் இறுதியில்.

உச்சக்கட்ட ட்விஸ்ட்டு மச்சான்ஸ். [பார்த்துட்டு நான் ஒரு நிமிஷம் பேஜார் ஆயிட்டேன்பா...]

கொஞ்சம் கொடூர த்ரில்லர் படம் பார்ப்பவர்கள் இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்

Tuesday, March 16, 2010

ஈகிள் ஐ (கழுகு கண்ணு) - 2008





சும்மா கில்லி மாதிரி படம் வேகமா இருக்கணும்னு எதிர் பார்த்தீங்கனா, இந்தாங்க இந்த படம் உங்களுக்குதான்...
என்ன படம் பாக்குறதுக்கு முன்னாடி, ரெண்டு காதையும் கிளீன் பண்ணி வச்சுக்கங்க,
படத்துல அவ்வளவு பூ, எல்லாம் உங்க காதுக்குதான்...!!! சுத்துறாங்க சுத்துறாங்க சுத்திக்கிட்டே இருக்காங்க... யப்பா.... எவ்வளவு...முடியல...

படத்த பாக்க தூண்டுகோளா இருந்தவர் , நம்ம பெரிய அண்ணாத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான், படம் அவரோட ப்ரொடக்ஷன்....!!!
மனுஷன் ஏமாத்தல, நல்லா நம்ம பேரரசு பாணியில ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படம் கொடுத்து இருக்கார். ட்ரான்ஸ்பார்மர் ஹீரோ ஷியாதான் இந்த படத்துக்கும் ஹீரோ.
(சாருக்கு இதுல டபுள் ரோல்...ரெட்ட பிறவி... ஜெர்ரி மற்றும் ஈதான்). 









ஜெர்ரியின் சகோ ஈதான் ஒரு விபத்தில் இறப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.

திடீரென்று ஜெர்ரியின் வங்கி கணக்கில் ஏகப்பட்ட பணம் ,வீடு தேடி வரும் போர் ஆயுதங்கள் என அவருக்கே புரியாமல் சில விஷயங்கள் அவரை சுற்றி நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் நடந்திட்டு இருக்கும் போதே ஹீரோ ஜெர்ரி ஷாவும்(ஷியா) ஹீரோயின் ராச்சல்- ம்(மிச்சல் மோனகன் - எம்.ஐ3 நாயகி ) சில எதிர் பாராத சம்பவங்களால் ஒன்று சேர்ந்து அவங்கூரு போலீசு மக்களால கர்ண கொடூரமா துரத்த படுறாங்க. ஹீரோயின் ராச்சலுக்கு ஒரு தனி ட்ராக்(முன் கதை) உண்டு.

ஒவ்வொரு இடத்தில் காவல் புஜாக்கிரமர்கள் இவர்களை மடக்கும்போது செல்போனில் (ரேடியோ, டீவீப்போட்டி, குண்டு பல்பு -ன்னு எல்லாத்துலயும் இவங்க வர்றாங்க...) வரும் ஒரு அசரீரி பெண் குரல் இவர்களை ஜகஜ்ஜால வித்தைகள் செய்து தப்பிக்க வைக்கிறது. தப்பிக்க வைப்பதோடு அவர்களின் எதிர்ப்புக்கு சில காரியங்களையும் செய்ய வைக்கிறது. ரெண்டு பெரும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் கையும் புரியாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றனர் (நமக்கும் ஒன்னும் புரியல...!!!).



ஏன் ரெண்டு பெரும் துரத்தப்படுகிறார்கள், அசரீரி பெண் குரல் யார்...? ஈதனுக்கு நடந்தது என்ன (குற்றம் உங்கள் பார்வையில்-னு) ? டைரக்டர் ரவுண்டு கட்டி அடிச்சு படத்த சுபம் போட்டு முடிச்சி வைக்குறார். படத்துல கெஸ்ட் ரோல்-ல அமெரிக்க ஜனாதிபதி வந்துட்டு போறார் (அந்தாளுக்கு இதே வேலையா போச்சு... ஆஹா ஓவரா பேசிட்டோமே நம்மளையும் FBI புடிச்சிடுமா.... ?)





நல்ல டைம் பாஸ் படம் மச்சான்...படம் பாக்குறதுக்கு முன்னாடி சத்தமா(தங்கமணி காதுல விழாத மாதிரி) நான் மசாலா படம் பாக்க போறேன்னு ஒரு தடவை சொல்லிட்டு பாருங்க, சர்வம் சுபம்.



என்ஜாய் தி டே !!!
அப்பாலிக்கா பாக்கலாம் மச்சான்ஸ்....!!


Saturday, March 13, 2010

ஊருக்கு போறோம்...!!!




மார்ச் 19 -2010 அதிகாலை 6.00 மணி. 

தங்க நாற்கர சாலையில் 50 கி.மீ வேகத்தில் தர்மபுரியை நோக்கி பயணித்து கொண்டிருந்தது அந்த அரசு விரைவு பேருந்து வண்டி.. 


வலப்பக்கம் நாலாவது சீட்டில் மாதவன், நம்ம கதையின் நாயகன். மனைவி மற்றும் பையனுடன் வெகு நாள் கழித்து தன் சொந்த ஊருக்கு பயணித்து கொண்டிருக்கிறான்..

மாதவனின் பாக்கட்டிலிருந்த செல் போன் சிணுங்க, அதை எடுத்து காதில் பொருத்தியவாறே.....

"ஹலோ "

"ஹல்லோ மாப்பிள்ள நான் தாண்டா பேசுறேன்...எங்க வர்றீங்க..."

“கிட்ட வந்துட்டோம் மாமா இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுல இருப்போம்...”

“சரி நான் மணி-ய உங்க வீட்டுக்கு அனுப்பி வக்கிறேன், வீட்ட சுத்தம் பண்ண உதவுவான்...”

“ரொம்ப தேங்க்ஸ் மாமா, நானே உங்ககிட்ட ஒரு ஆள் வேணும்னு சொல்லலாம்னு இருந்தேன்...”

“என்னடா இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு...முன்ன மாதிரி அடிக்கடி ஊருக்கு வந்தா பரவா இல்லை, சென்னை போய் செட்டில் ஆனதில் இருந்து எப்பவோ ஒரு தடவை தான வீட்டுக்கு வர்றே...அதான் அந்நியமா பேசுறே...”

“என்ன மாமா இப்படி சொல்றீங்க, முன்னாடி அம்மா இருந்தாங்க, வருசத்துக்கு ஒரு முறை வந்தோம், இப்ப அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க...அதான் வர முடியுறது இல்ல மாமா..”

“சரி அத விடு, இப்ப கரெக்டான நேரத்துக்கு தான் வந்திருக்க...”

“ஹ்ம்ம்...தெரியும் மாமா தெரிஞ்சுதான வர்றேன்..
நமக்கே எப்பவாவது ஒரு முறை தான் இந்த மாதிரி லக் அடிக்குது...இதப்போய் மிஸ் பண்ணிடுவனா....”

“நேத்துதான் இங்க ஆரமிச்சாங்க..உனக்கும் எல்லார்க்கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்டா...”

" ரொம்ப தேங்க்ஸ் மாமா..."

பார்றா திருப்பியும் தேங்க்ஸ் சொல்றான்... சரி சரி சீக்கிரம் வந்து சேரு...

இதோ ஊரு கிட்ட வந்திடுச்சு மாமா...இன்னும் கொஞ்ச நேரம்தாம்.. சரி போன வக்கிறேன் நேர்ல பேசுவோம்...

ஊரின் வரவேற்ப்பு பலகையை பார்த்து சிரித்துக்கொண்டே செல் போனை பாக்கெட்டுக்குள் தள்ளினான் மாதவன்...

பென்னாகரம்(இடைத்தேர்தல்) ஊராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!





                                                                -  சிவன்

Friday, March 12, 2010

பண்டோராவை தாண்டி வருவாயா !!?!

ஹாய் ஹாய் ஹாய் மச்சான்ஸ் !!
கொஞ்ச நாளா (மாசமா ) , நம்ப மாப்பி "சிவன்@தீபன்" தனியா பதிவுகள் போட்டு கலக்கிட்டு இருக்கிறாரு ..கூடவே மொக்கை போட நானும் ரெடி ..

பண்டோரா பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன தண்டோரா (கவித ..கவித ..ஆஹ் ஆஹ் ) :

தீபன் (சிவன்) மற்றும் அருண் (நான் தாங்க ) ரெண்டு பேரும் ஒரே கல்லூரி யில் பொறியியல் படித்து (?!?!) , ஒன்னாவே கேரளா வில் மென்பொருள் துறை யில் (அட Software engineer பா ) குப்பை கொட்டிட்டு இருந்தோம். ஒரு நாள் காலைல , நைட் சரக்கடிச்ச மப்பு தெளியாம , தீபன் மூளைல (?!?) உதிர்த்த ஒரு முத்தான ஐடியா தான் இந்த "மச்சான்ஸ் பதிவு " !! கொஞ்ச கொஞ்சமா நாங்க அதை செய்ய ஆரம்பிச்சோம் , எங்க அறையில் இருந்த பல நண்பர்கள் உதவியும் உற்சாகமும் கிடைத்தது ..சொல்ல போனா, தீபன் தான் இந்த பதிவின் ஆணி வேர் .மும்பை நண்பர் எட்வின் (ஓவியா ) எப்போதாவது எழுதவது உண்டு ; எங்க வேலை பிரஷர்களுக்கு இடையே (?!?) நினைத்தது விட ரொம்ப மகிழ்ச்சி தந்துட்டு இருக்கிற ஒரு விஷயம் இந்த பதிவும் , உங்க ஆதரவும்.

சில மாதங்கள் ;
73 followers;
66 பதிவுகள் ;
25000 மேற்பட்ட பார்வைகள்;
விகடன் குட் ப்ளாக்ஸ்ல் வந்தது ;
நிறைவான தமிழிஷ் & உலவு ஓட்டுக்கள் ;

இதெல்லாத்தையும் விட
நெகிழ்வான பின்னூட்டங்கள் ; நிறைய நிறைய நண்பர்கள்; (ஆல் மச்சான்ஸ் , ரொம்ப நன்றி (இதை விட சிறப்பான வார்த்தை கிடைக்கலை :( ..)
----------------------------------------------------------
பீல் பண்ணது போதும்....கம்மிங் பேக் டு தி ஸ்டோரி :
ஆனா இயற்கை எங்க நட்பை பிரிக்க நினைத்து , என்னை பிரான்ஸ்ல மேற்படிப்பு படிக்க வச்சிருச்சி இப்போ ..சோ ..உலக தொலை காட்சி ..சீ சீ , உலக பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக நம்ப "மச்சான்ஸ் பதிவு " , உலகத்தலைமையிடமாக (அடடா World Headquarters பா ) இந்தியாவையும் , ஐரோப்பிய செயலகமாக பிரான்சையும் கொண்டு இயங்கும் !!

(ஹி ஹி.. இந்த மொக்கை கண்டு சினம் கொண்டவர்கள் "அழுகின முட்டை மற்றும் தக்காளிகளுக்கு பப்பு வை அணுகவும்" !! )

---------------------------------------------------------

பண்டோராவை தாண்டி வருவாயா :


சமீப காலத்தில வந்த சிறப்பான ரெண்டு படங்கள் "அவதார்" மற்றும் "விண்ணை தாண்டி வருவாயா " ..
அது ரெண்டையும் நேர்த்தியா சேர்த்து இருக்காங்க SSN (chennai) கல்லூரி மாணவர்கள்..
நல்ல வீடியோ , அவசியம் பார்க்கவும் !!

Thursday, March 11, 2010

குட்டி என்றொரு குட்டி கதை


boy sad gloomy layout Images
அப்பா...

ம்ம்...

அப்பாஆஆ...

என்னடா..

நான் ஒன்னு கேட்பேன் நீங்க அத வாங்கி தரணும்...

என்னன்னு சொல்லு..

நீங்க மொதல்ல வாங்கி தர்றேன்னு சொல்லுங்க..

என்னென்னு சொல்லுடா...

அதெல்லாம் முடியாது, வாங்கி தர்றேன்னு சொல்லுங்க..அப்பத்தான் சொல்லுவேன்..

இப்ப உதை வாங்க போற..

எனக்கு அதோ அந்த கடைல இருக்குதுல, அந்த ரிமோட் கார் வேணும்...

குட்டி, அது விலை அதிகம்டா அப்பா உனக்கு இன்னொரு நாள் வாங்கி தர்றேன்..

ஹ்ம்ஹும்..எனக்கு இப்பவே வேணும்..

அது விலை அதிகம்டா, அப்பாகிட்ட இப்ப அவளோ காசு இல்லை....நான்தான் இன்னொரு நாள் வாங்கி தர்றேன்னு சொல்றேன்ல...

நீ இப்படிதான் எப்ப பார்த்தாலும் அப்புறமா வாங்கி தர்றேன்னு என்னை ஏமாத்திக்கிட்டே இருக்க, ஆனா வாங்கி தரவே மாட்டேங்குற...


வேணாம் குட்டி , அப்பா சொல்றத கேளு...உனக்கு வேற பொம்மை வாங்கி தர்றேன்...

அப்பா , எனக்கு அந்த மாதிரி கார் ஓட்டணும்னு ரொம்ப நாளா ஆசைப்பா...
இப்ப நீ எனக்கு வாங்கி கொடுப்பியா மாட்டியா..

நீ ஒதை வாங்க போறேன்னு நெனக்கிறேன்...ஒழுங்கா சொல்றத கேளு...  

(இடைமறித்து சத்தமாக) போ நான் கேக்க மாட்டேன், எனக்கு அந்த ரிமோட் கார்தான் வேணும்ம்ம்ம்...

(கோவத்துடன்) டே உனக்கு சொன்னா புரியாதா, அந்த கார ஓடவிட்டா எங்கயாவது ஓடிக்கிட்டே இருக்கும், உன்னால அது பின்னாடியே ஓட முடியுமா ராஸ்கல்..???

.......
.......
.......
குட்டி அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்க அவனது கண்கள் மௌனத்தின் அழுத்தத்தில் ஈரமாயிருந்தன...கண்ணீர் சத்தமில்லாமல் கசிந்தது...

அவசரத்தில் இப்படி கோவப்பட்டு விட்டோமே என்று நினைத்த அப்பா, அதை வெளிக்காட்டாமல் குட்டியின் சக்கர நாற்காலியை மெதுவாய் தள்ளிக்கொண்டு சென்றார்...!!!

(முற்றும்)

பி.கு - அப்பா அழுதது குட்டிக்கு தெரியாது...

இப்படித்தான் பல அப்பாக்களின் அழுகை எந்த குட்டிகளுக்கும் தெரிவது இல்லை...!!!

                                                                -  சிவன்

Thursday, March 4, 2010

கிளைமாக்ஸ் கதைகள் - 1




இது ஒரு புது முயற்சி(அத நாங்க சொல்லணும்) மச்சான்ஸ்...

கீழே இருபது வரிகளில் ஒரு கதை(?) இருக்கு..என்ன கதையின் முடிவு மிஸ்ஸிங்....
ப்ளாக் உலகில் கதை எழுதும் எல்லா மச்சான்சுக்கும் , இதுதான் உங்களுக்கான சவால்,
கீழே இருக்கும் கதையை இன்னும் ஐந்து அல்லது அதற்கும் குறைவான வரிகளில் முடிக்க வேண்டும்....ஒரே காட்சிதான் என்றில்லை, இரண்டு மூன்றானாலும் பரவாயில்லை...

பயங்கரமான டுவிஸ்ட் கொடுத்தால் குஜாலிக்கா இருக்கும்.. மென்மையான முடிவு என்றாலும் ஒ.கே. ..
உங்களது முடிவை பின்னூட்டமாக போடவும்,  பின்னர் ஒவ்வொரு முடிவும் உங்களது பெயருடன் பதிவில் இணைக்கப்படும்...
இதில் வெற்றி தோல்வி இல்லை, போட்டி எதுவும் இல்லை, எல்லாரும் பங்கு பெற ஒரு சிறு முயற்சி..
சும்மா ஜாலியா ஒரு ட்ரை பண்ணிட்டு போங்க.... எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா ???

உங்களது ஆதரவை எதிர்பார்த்து, இதோ முதல் கதை..
----------------------------------------------------------------------------------

" டே உங்க சித்தப்பா ஊர்ல இருந்து இன்னைக்கி வர்றாரு, சீக்கிரம் எந்திருச்சு அவர போய் கூட்டிட்டு வா..."
"அவருக்கு என்ன நம்ம வீடா தெரியாது, அவரே ஆட்டோ புடுச்சிட்டு வந்திடுவார், கொஞ்ச நேரம் தூங்க விடும்மா..."
-------------------------------------------
" காந்தி நகர் போகணும்,எவ்வளவு ? "
"பதினஞ்சு ரூபா சார்..."
"சரி வாங்க "
-------------------------------------------
"இன்று காலை ஆறு மணிக்கு சென்னை வந்தடைந்த நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் ராஜன் என்ற பயணி
மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதத்தை கைப்பற்றிய ரெயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர் "
-------------------------------------------
ட்ரிங் ட்ரிங்....
"ஹலோ"
"செல்வி, ராஜூ வந்து சேர்ந்துட்டானா ?"
" இல்லங்க இன்னும் காணும்"
"ரவி ஸ்டேஷனுக்கு போனானா ?"
"இல்லங்க அவன் இன்னும் தூங்கிட்டுதான் இருக்கான்"
"சரி ராஜூ வந்தா உடனே எனக்கு போன் பண்ண சொல்லு"
"சரிங்க"
டொக்.
-------------------------------------------
" நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது,
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"
" The Subscriber you are calling is currently switched off, please try after sometime"
-------------------------------------------
வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது...

.
.
.
.
இதற்கு மேல் உங்கள் முடிவு...
.
.
.
-------------------------------------------

பின்னூட்டத்தில் வந்த சில சுவாரஸ்யமான முடிவுகள்....


Chitra :


----------------------------------------
" காந்தி நகர் போகணும்,எவ்வளவு ? "
"பதினஞ்சு ரூபா சார்..."
"சரி வாங்க "
-------------------------

.......... வீட்டுக்கு திரும்பி வர, தனக்கும் சித்தப்பாவுக்கும் அவரின் பெட்டிக்கும் சேர்த்து, ஆட்டோவுக்கு இருபது ரூபா ஆகும் என்று இருந்தான்.

ரயில் பெட்டியில் பெட்டி பாம்பாய் உயிர் அடங்கி வந்த சித்தப்பாவை பெட்டியில் வைத்து, அவரின் பெட்டியுடன் போலீஸ் - மார்ச்சுவரி என்று பல இருபது ரூபா நோட்டுக்களை தொலைத்த பின், வாரேன் என்று சொல்லி விட்டு போய் விட்ட சித்தப்பாவின் மர்ம மரணத்தில் - கவலையுடன் வீடு வந்து சேர்ந்தான்  .
.
.
----------------------------------------


முகிலன் :

“டேய் நாயே.. படிச்சு முடிச்சி வேலைக்கிப் போணும்ன்ற நெனப்பே இல்லாம, சேனல மாத்தி மாத்தி டிவி பாத்துக்கிட்டு உக்காந்திருக்கியேடா.. எவ்வளவு நேரம் கூப்புடுறது? செல்போன் ஆஃப் ஆகியிருக்கறதக் கூடவா பாக்க மாட்ட?”

நெருப்பாய் விழுந்த வார்த்தைகள் முதுகில் சுட சோபாவில் இருந்து எழுந்த ரவி ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய அப்பாவைப் பரிதாபமாகப் பார்த்தான்.
 .
.
----------------------------------------
பின்னோக்கி :

செத்துப் போனவன் உயிரோட வந்தது மாதிரி அப்படி ஏன் பார்க்குறீங்க ?. செல்போன் சார்ஜ் போயிடுச்சு. 

----------------------------------------

கடவுள் பாதி மிருகம் பாதி..  :

"அடப்பாவி !!! சித்தப்பாவ கூட்டிகிட்டு வாடான்னு சொன்னா .. யாரோ ஒரு பொண்ண சொல்லாம கொள்ளாம கல்யாணம் கட்டிக்கிட்டு வந்துநிக்கற.. இதுக்கு உன் சித்தப்பா வேற சாட்சியா??.. இதுக்கு தான் காலைல இருந்தே செல்ல ஆப் பண்ணி வச்சிடீங்களா.... அய்யோயோ!!! உங்க அப்பாக்கு என்னடா பதில் சொல்வேன்... "
என்று அலறிக்கொண்டே உள்ளே செல்லும் அம்மாவை பார்த்து ரவியும் அவனது சித்தப்பா ரங்கராஜுவும் உதடு பிரியாமல் மெல்ல சிரித்து கொண்டனர்..

உள்ளே திடீரென்று . பாத்திரம் உருளும் சத்தமும், அம்மா!! என்ற அலறலும் கேட்க.. வெளியே நின்ற மூவரும் அதிர்ந்து உள்ள ஓடி போய் பார்க்க .. ரவியின் அம்மா மயங்கி விழுந்திருந்தாள்..

அவர்கள் வீட்டு காலேண்டர் ஏப்ரல் ஒன்றை காட்டி பல் இளித்து சிரித்து கொண்டு இருந்தது..


----------------------------------------


மழைக் காதலன் அருண். இரா :

கூடவே போலீஸ் ஜீப் சத்தமும் சேர்ந்து கேட்டது ..
ஆட்டோ வில் இருந்து ரவியின் அப்பா இறுக்கமான முகத்துடன் இறங்கினார் , ஜீப்பில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன், வீட்டுக்குள் சரேல் என நுழைந்து , படுக்கை அறையில் இருந்த ரவியை மெல்ல எழுப்பி " ரவி சாரி , bad Morning" என்றபடி விலங்கை நீட்டினார்.

பேயறைந்து நின்ற செல்வியிடம் , உங்க பையன் ரவி , நீங்க நெனைக்கிற மாதிரி பச்சை புள்ள இல்ல மேடம் . அவன் பின்னாடி ஒரு பெரிய போதை மருந்து கும்பலே இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி பேப்பர் ல பார்த்து இருப்பீங்களே , " அருண் IPS , அதிரடி என்கௌண்டர் : வெட்டு கணேசன் ,மாஞ்சா மான்டி , டம்மி ரமேஷ் பலி " , அந்த கும்பல் கூட தொடர்பில் இருக்கிறவன் தான் இந்த ரவி . இது தெரிஞ்சு , அதை உங்க கிட்ட சொல்ல வந்த அவன் சித்தப்பாவை காலைல ரயில்ல கொன்னுட்டு , சத்தமில்லாமல் இங்க தூங்கிட்டு இருக்கான் . எல்லாம் சரி யா செஞ்சுட்டு , அவரோட iphone எடுத்துட்டு வந்தது தான் இவன் தப்பு . செல் ஆப் பண்ணாலும் GPS இவன காட்டி குடுத்துடுச்சி..

"என்ன ரவி ஸ்டேஷன் போலாமா? ரயில்வே ஸ்டேஷன் இல்ல , போலீஸ் ஸ்டேஷன் !! " என்று சொன்ன படி, ஸ்டைல் ஆக தன் கூலிங் க்ளாசை மாட்டி கொண்டு ஜீப்பில் ஏறினார் தீபன்


----------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...